Sunday, October 4, 2009

உணர்வு

உதயத் தீயில், மணங்கமழ் மலர் புன்னகைக்கும்,
மதியம், தூரத்துச் சாலைகள் கண்ணீர் சிந்தும்,
சந்தியம், தென்றல் பூப்பெய்தும்,
இரவுதனில் தீச்சுடர் சிறையில் சோகமாகும்;

வளர் மழலை இன்பந்தந்து, இடர் நினைவுறுத்தும்,
பருவ மகளிர் அழகு கவர்ந்து, பயமுறுத்தும்;
வளர்ந்த வயதும், அனுபவங்கண்டு இன்பம் தள்ளி வைக்கும்
மூப்பெய்தும் பருவமும் மரணம் தெரிந்தும் இன்புறும்!

கலவைகள் கோர்வையிங்கு
ஒன்றின் ஜீவிதம் உணவாம் மற்றதிற்கு;
தள்ளி வைத்து வசித்தல் ஞானம்,
உள் வைத்து இருத்தலோ சூன்யம்.

3 comments:

  1. நல்ல இருக்கு ... தொடருங்கள் வாழ்த்துக்கள்
    வேல் கண்ணன்

    ReplyDelete
  2. மிக்க நன்றி வேல்கண்ணண்

    ReplyDelete
  3. ஆத்தாடி ஒரு குருப்பே ரவுண்டு கட்டி அடிக்கிறாய்ங்களே’

    வசந்து ஓடிப்போயிடு நீயெல்லாம் எதுக்கு ப்ளாக் எழுதுற இதுமாதிரி பிரமாதமான புரியாத கவிதை எழுதுனாத்தான் பதிவர் எழுத்தாளர்ன்னு சொல்லுவாய்ங்களாமே...

    ReplyDelete