அதிகாலை விழித்து,
அரனைப் பூசித்து,
இரையைப் புசித்து,
பஸ்ஸில் நெரிந்து,
வியர்வை வழிந்து,
அலுவலகத்துள் நுழைந்து,
வேலைக்குள் அமிழ்ந்து,
'ஸார்' எனப் பணிந்து,
மதியம் உணவை அடைத்து,
மாலை மறந்து,
இரவுப்பறவையாய்ப் பறந்து,
வீட்டினுள் அடைந்து,
'அம்மாடி' என விழுந்து,
நிமிரும் பொழுதில்
முகம் மலர்ந்து,
சீண்டிச் சிரித்து,
ஆறு மாத மழலை தவழ்ந்து
பாதம் பிடிக்கையில்,
இயந்திர வாழ்க்கை இழந்து,
இயல்பாய் ஆகும் தருணம் அது!
நல்லத் தருணம்.
ReplyDeleteதிரு கருணாகரசு!
ReplyDeleteதங்களுக்கு நன்றி!