சந்திர பார்வை,
நிசப்த நடுநிசி,
கீற்றுகளோடு காற்று
உறவாடும் வேளை,
ஊரே உறங்கிக்கொண்டு...
நான் மட்டும் விழித்துக்கொண்டு..
அறியா வயதில்
ஆராயாமல் வந்த காதல்...
நினைத்துப் பார்க்கிறேன்,
விதை ஒன்று
பட்டென்று முளைத்து,
பளிச்சென்று சிரித்து
பசுமை காட்டுமே...
அது போலத்தான்
உன் நினைவுகளும்...
கலர் கலராய்க்
கண்ட கனவுகள்
உன் நினைவில் இருக்குமா????
எப்பொழுதும் இல்லையென்றாலும்
எப்போழுதாவது நினைத்துக் கொள்வாயா???
ஒரு காலத்தில்
உன்னை முழுதுமாய் அறிந்தவன் - இன்று
உண்மை அறியமுடியாமல்...
எனக்குள் இருக்கும்,
எதிர்பார்ப்பின் ஏமாற்றங்கள்
உனக்குள்ளும் இருக்குமா???
விடை இல்லாக் கேள்விகள்தான்
வாழ்க்கையா??
முடிவில்லா வினாக்களில்
தான் வாழ்க்கை யென்றால் - இந்த
கவிதைக்கு மட்டும்
முடிவெதற்கு???
நல்லா இருக்குங்க.
ReplyDeleteஎப்பொழுதும் இல்லையென்றாலும்
ReplyDeleteஎப்போழுதாவது நினைத்துக் கொள்வாயா???//
ஒரு காலத்தில்
உன்னை முழுதுமாய் அறிந்தவன் - இன்று
உண்மை அறியமுடியாமல்...//
ஒரு காலத்தில்
உன்னை முழுதுமாய் அறிந்தவன் - இன்று
உண்மை அறியமுடியாமல்...//
அத்தனை வரிகளிலும் மெல்லிய வலிகள்... இது எனக்கு முதல் அனைவருக்கும் நிகழந்ததுதான்... நிகழ்வுதுதான்.
கவிதை அருமை.
திரு பா ரா - நன்றி!
ReplyDeleteதிரு கருணாகரசு - ரொம்ப அனுபவம் போல!
இருந்தாலும், உங்கள் வரிகளில் எல்லோருடைய நிஜங்களும் தெரிகின்றன!