Sunday, October 18, 2009

நறுக்ஸ் - 2

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்


*ஊர்...*
ஊரில் உங்கள் சுடுகாடு.
சுடுகாட்டில் எங்கள் ஊர்.


*உறுத்தல்..*
இரவெல்லாம் விழித்திருந்து
எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
வாங்கினேன் உறங்குவது எப்படி
இவள் பாயில்?


*மனிதன்..*
இவன் பசுவின் பாலைக்கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்….

*மேடை...*
தமிழா!
ஆடாய் மாடாய்
ஆனாயடா…
நீ என்றேன்
கைதட்டினான்

*பெண்..*
ஏடுகளில் முன்பக்க
அட்டையில்
வீடுகளில் பின்பக்க
அடுப்பங்கரையில்.

3 comments:

  1. ஒவ்வொன்றும் நறுக்!

    //இரவெல்லாம் விழித்திருந்து
    எங்களுர் ஆச்சி இழைத்தபனைபபாய்…
    வாங்கினேன் உறங்குவது எப்படி
    இவள் பாயில்?//

    இது மனதை பிழிகிறது!

    ReplyDelete
  2. எல்லாம் அருமை. காசி ஆனந்தன் நறுக்குகள்
    படித்த ஞாபகம் வந்தது.
    என்னை மிகவும் கவர்ந்தவை (நறுக்கியவை)
    //கோயில்.., தளை,
    சாமி, பெண் ,//
    தொடர்க... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //ஏடுகளில் முன்பக்க
    அட்டையில்
    வீடுகளில் பின்பக்க
    அடுப்பங்கரையில்.//

    இந்த நிலை என்றைக்கு மாறுமோ?

    ReplyDelete