Sunday, January 31, 2010

என் நிலவே!

என் காதல் வானில் ஒரு வெண்ணிலவே
அது வளர்ந்து வந்தது என் நெஞ்சிலே
தாயின் கனிவை கண்டதுன் உறவிலே
அது சேயாய் வளர்ந்த்துன் கருவிலே

ஊடல் மேகம் வந்ததென் சொல்லிலே
கூடல் மழையாய் பொழிந்ததுன் கண்ணிலே
காதல் பசலையும் உன் பிரிவிலே
அது தீரும் நேரமோ நான் உன் அருகிலே

உன்னால் வந்த காதல் நோயிலே
தேய்பிறையாய் தேய்ந்தேனடி பெண்ணிலவே
நோயே மருந்தாம் வள்ளுவன் சொல்லிலே
உன்னில் நான் தெளிந்தேனடி பொன்னிலவே

என் இரவின் இருள் நீக்கும் வெண்ணிலவே
பகலிலும் தஞ்சம் புகுந்தது என் வீட்டினிலே
வானில் தேய்ந்து வளரும் வெண்ணிலவே
என்னோடு இருக்கையிலே என்றும் முழுநிலவே…

Friday, January 29, 2010

ஊடல்!

விண்ணோக்கும் மண்நோக்கும்
மனம்நோக்கா பிரிந்த நட்பு
தானேங்கி கண் நோக்கி மனம் நோக்கும்
காதல் பசலைவாழ் கைசேரா ஊடல்

Wednesday, January 27, 2010

புகைத்தல்!

மதி மயக்கி தொடரும் விநாடி பயணம்
தன் முடிவை தானே தேடும் விரலிடை மரணம்!

Friday, January 15, 2010

என்றோ எழுதிய கவிதை - 14

நிலவினுள் களங்கம்...
உன் மனதில்...நான்!

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

அன்பு நெஞ்சங்களுக்கு,

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

ஜே கே அவர்களின் இந்திய விஜயம், கேயார் அவர்களின் பணிப்பளு, பருப்பு ஆசிரியரின் தீர்த்த யாத்திரை காரணங்களினால் 'பதிவு' பக்கமே வர முடியவில்லை...!

தங்களின் மேலான படைப்புகளையும் படிக்க இயலவில்லை! இழந்த தருணங்கள் இவை!
இதோ வந்துவிட்டோம்!

என்றும் அன்புடன்,
இன்றைய கவிதை அன்பர்கள்