Thursday, October 22, 2009

நறுக்ஸ் - 3

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்

*திமிர்..*
வேலைக்காரன்மேல் பாய்ந்தார்
நாயே பீட்டரை கவனித்தாயா?
இவர் வீட்டில் பீட்டர் என்றால் நாய்
நாய் என்றால் மனிதன்.

*கொலை..*
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
விரியுமுன்பே பறித்து
இனறவனுக்கு அர்ச்சனை
செய்கிறான்
நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு.

*அடக்கம்..*
அடக்கம் செய்யப்படுகிறோம்…
இரண்டு பெட்டிகளில்.
சவப்பொட்டியிலும்
தொலைக்காட்சிப் பெட்டியிலும்.

*ஆணாதிக்கம்..*
எப்படியும் இருக்கலாம்
ஆணிண் திமிர்
திரௌபதைக்கு கணவன் ஐந்தாகவும்
அர்ச்சுனனுக்கு மனைவி ஐந்தாகவும்

*வேலி..*
மயில் இறகு புலித்தோல்
மான் கொம்பு யானைத்தந்தம்
அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
வனவிலங்குகள் காப்பாளர் அப்பா

1 comment:

  1. *கொலை..*
    ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு…
    விரியுமுன்பே பறித்து
    இனறவனுக்கு அர்ச்சனை
    செய்கிறான்
    நூறாண்டு வாழ்ககை வேண்டி தனக்கு.//

    இதே கருத்தை நானும்கூட... எனது தேடலைச்சுவாசி நூலில் 2004_ ல் எழுதியிருக்கிறேன்

    காண்க...http://anbudannaan.blogspot.com/search/label/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81

    அனத்தும் படித்தேன் அருமை.

    //*வேலி..*
    மயில் இறகு புலித்தோல்
    மான் கொம்பு யானைத்தந்தம்
    அழகாய் இருக்கிறது எங்கள் வீடு.
    வனவிலங்குகள் காப்பாளர் அப்பா//

    இந்த கவிதை ஈழத்து கவிஞர் காசி.ஆனந்தன் எழுதியதாய் நினைவு.

    ReplyDelete