Friday, October 16, 2009

நறுக்ஸ் - 1

'நறுக்ஸ்' என்கிற தலைப்பு...
மின்னஞ்சலில் விழுந்த கவிதைகள்..
'நெருப்ஸ்' பறந்தன!

நன்றி: புனே தமிழ் சங்கம்


*கோயில்..*

செருப்புகளை வெளியே விட்டு

உள்ளே போகிறது அழுக்கு.


*தளை..*

கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.


*பெண்மை..*

தெரிவது உனக்கு அவள் கண்களில்

வண்டும் மீனும் பூவும்

தெரிவதில்லை கண்ணீர்.


*வெறி..*

எரியவில்லை அடுப்பு சேரியில்.

போராடினோம்…

எரிந்ததுஅடுப்பல்ல-சேரி.



*சாமி..*

எங்கள் குடிசையில்

அடிக்கடி சாமி ஆடுவாள்

அம்மா ஏனோ தெரியவில்லை

அன்றும் இன்றும்

குடிசைக்கே வருகிறது சாமி

மாடிக்கே போகிறது வரம்.

3 comments:

  1. \\*தளை..*

    கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்

    பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.//


    பெண் விடுதலை என்பதை தப்பா புரிஞ்சிட்டாங்க போல இந்த கவிதை எழுதினவங்க.

    பெண் விடுதலை என்பது தன்னையோ அல்லது இன்னொரு பெண்ணையோ அடிமையாக்க் முயற்சிக்கும் கணவனையோ அல்லது மற்றவர்களையோ எதிர்த்து வெல்ல முயற்சிக்கும் செயல். அதற்கு போராடுகின்ற அமைப்பில் சேர, தன்னை புரிந்துகொண்டு தன்னோடு நேர்மையாய் வாழும் கணவனிடம் ஒப்புதல் கேட்டல் நியாயந்தானே.
    இதில் என்ன தவறூ கண்டீர்?

    ReplyDelete
  2. கணவனிடம் ஓப்புதல் கேட்கிறாள்
    பெண்கள் விடுதலை அமைப்பில்சேர.//

    I liked these lines

    ReplyDelete
  3. //செருப்புகளை வெளியே விட்டு

    உள்ளே போகிறது அழுக்கு.//

    நெத்தியடி.

    ReplyDelete