Thursday, September 29, 2011

ஏன் இறைவா?

புகழுக்கு நாணி,
கர்வத்திற்குக் கூனி,
பணிவிற்குப் பழகி,
பந்தத்திற்க்கடங்கி,
பாசத்திற்கு மயங்கி,
நேசத்திற்கு முடங்கி,
உறவுக்கு ஏங்கியிருக்கும்
பிறப்பாய் நான்...

உருவம் இருந்தும்
உறவும், பலரும்,
எனை அருவமாய்
பார்க்கும் அவலம்...!

இவையாவும் புரியும்படி
படைத்ததும்...

ஏன் இறைவா?!

3 comments:

  1. இதுதான் பிரச்சினையே ஜே கே! எங்கு நாம் அன்பு செலுத்துகிறோமோ...அங்கேயே அங்கீகாரம் எதிர்பார்த்து ஏங்கி நிற்பது...!

    இந்த சமயத்தில் நம்மை அங்கீகாரம் செய்து, போற்றிக் கொண்டிருக்கும் ஒரு மனிதத்தை நாம் மறந்து விடுகிறோம்...! அதுவும் கண்ணீர் விட்டுக்கொண்டு, இது போல் ஒரு அங்கலாய்ப்பு கவிதை எழுதினால்தான் புரியும் நம் மரமண்டைக்கு...!

    'நான் அருவமா?' என்று அழுவதை விட 'நாம் யாரையேனும் 'அருவம்' ஆக்கிக்கொண்டு இருக்கிறோமா?' என்று யோசித்தால் போதும்... வாழ்வு வசந்தமாகி விடும்...!

    இதில் என்ன புரிதல் இருக்கு....அறியாமைதான் கொட்டிக் கிடக்கு...இதைப் படிக்கும் இறைவன் கூட ஒரு புன்முறுவல் பூத்துவிட்டு மன்னித்து விடுவான்...!

    இது போன்ற 'முட்டாள்' கவிதையும் எழுதுவீர்களா ஜே கே?

    -கேயார்

    ReplyDelete
  2. பாத்திரம் மட்டுமே நம்மிடம்..
    அதன் சூத்திரம் உள்ளது
    அவனிடத்தில்..

    ReplyDelete
  3. அருமையான் பின்னூட்டம் தோழரே, தங்களின் தொடரும் வாழ்த்துக்கும் ஊக்கத்திர்க்கும் என்றும் எனது நன்றி

    ஜேகே

    ReplyDelete