Sunday, September 4, 2011

உபகார உபத்திரவம்

சிற்றெறும்பு ஒன்றுக்கு
உபகாரமாய் இருந்திடவே,
போக்கை நிறுத்தி,
கையில் இருத்தி,
இலக்கில் சேர்த்தேன்...!

விட்ட நொடியில்
இலக்கின்றி ஆனது..!!

உபகாரம்,
செய்வதில் மட்டுமில்லை
செய்யாதிருத்தலிலும்
உண்டென்றே உணர்ந்தேன்!

2 comments:

  1. அருமையான சிந்தனை
    கவி பாரதி சொல்வது போல
    விட்டு விலகிப் பார்த்தால்தான் அது புரியும்
    அதை புரிந்து கொள்ளக் கூட தனிப் பக்குவம் வேண்டும்
    அது வாய்க்கப் பட்டால்தான் இதுபோன்ற
    தனித்துவமான கவிதைகளைத் தரமுடியும்
    தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete