வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!
காதுகளை விசிறிகிட்டு...
தும்பிக்கையை ஆட்டிகிட்டு ...
தொந்திதனை தூக்கிகிட்டு...
வர்றாரரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!
கொயுக்கட்டை துன்னுகிட்டு
கொயு கொயுன்னு இருக்கிறாரு...!
கொண்ட கடலை மென்னுகிட்டு
கொண்டாட்டம் செய்யுறாரு...!
பழங்களை முழுங்கிகிட்டு
பள பளன்னு சொலிக்கிறாரு...!
அலுங்காம, நலுங்காம,
தளுககாதான் பூபோட்டு,
அவர் காலைப் புடிச்சாத்தான்
நல்லத பேச விடுவாரு...!
நல்ல மனசை கொடுப்பாரு...!
'லஸ்மி'யான்ட சொல்லிவிட்டு,
'ரிச்'சா வாழ வெப்பாரு!
சிம்பிள் சாமி அவருதானே...!
அரச மரம் போதும்தானே...!
மஞ்சத்தூளை வெச்சி நாமும் - அவர்
மனசை புடிச்சி வெப்போமே!
மொத சாமி அவருதானே...!
மொத சுளியும் அவருதானே...!
டெய்லி அவரை நெஞ்சில வெச்சா,
கஸ்டமெல்லாம் தொலஞ்சிருமே..!
எல்லாம் சோக்கா முடிஞ்சிருமே...!!
வர்றாரையா வர்றாரு,
பிள்ளையாரு வர்றாரு!!
தர்றாரையா தர்றாரு,
சந்தோசத்த தர்றாரு!!
'லஸ்மி'யான்ட சொல்லிவிட்டு,
ReplyDelete'ரிச்'சா வாழ வெப்பாரு!
பாட்டும் அதற்கேற்ற படமும் மிக மிக அருமை
எதற்கும் ஒத்துவரக்கூடிய கடவுள் ஒருவர்
உண்டென்றால் அது பிள்ளயார் தவிர வேறு யார்?
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
சென்னைத்தமிழில் ...ஜோராகீது!
ReplyDeleteசோக்கா கீதுபா அவராண்ட நம்பள பத்தியும் ஒரு தபா சொல்லிவைமா
ReplyDeleteஜேகே
திரு ரமணி அவர்களே,
ReplyDeleteநான் அவ்வையாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
வாக்குண்டாம்
நல்ல மனமுண்டாம்
மாமலராள் நோக்குண்டாம்
மேனி நுடங்காது
பூக்கொண்டு
துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வர் தமக்கு.....
என எளிமைத் தமிழில் எழுதியிருந்ததை நான் சென்னைத் தமிழாய் மாற்றினேன்...!
ரசித்தமைக்கு நன்றி!
தென்றல் அவர்களுக்கு,
நன்றி பல.
தோழர் ஜே கே,
நாமெல்லாம் அவரின் 'கீழே'தானே இருக்கிறோமப்பா! எல்லோருக்கும் அவரருள் உண்டு!
//மொத சாமி அவருதானே...!
ReplyDeleteமொத சுளியும் அவருதானே...!
டெய்லி அவரை நெஞ்சில வெச்சா,
கஸ்டமெல்லாம் தொலஞ்சிருமே..!
எல்லாம் சோக்கா முடிஞ்சிருமே...!!//
வரிகள் அனைத்தும்அருமை நண்பரே..
நட்புடன்
சம்பத்குமார்