Wednesday, September 28, 2011

காதல் குளம்

ஓரிடத்திலிருக்கும்,
தீராதிருக்கும்,
அமுதசுரபியாயிருக்கும்,
அனுபவம் தந்திருக்கும்,
சிரிக்கச் சிரித்திருக்கும்,
சலனப்படச் சலனமாகும்,
முங்கி எழ, மோகம் தரும்,
மீண்டும் முங்கச்சொல்லும்...

எல்லையை என்னிடத்தில் தந்தே...
எல்லையில்லாதிருக்கும்!

3 comments:

  1. நண்பா...

    //முங்கி எழ மோகம் தரும்,
    மீண்டும் முங்கச்சொல்லும்...//

    இது காதலுக்கும்...உள் மறைந்திருக்கும் கலவிக்கும் கூட பொருந்தும்...!

    அட்டஹாசம்...! தொடரட்டும் உன் பணி...!
    வளரட்டும் 'உன் கவிதை' மேல் என் பிணி..!!

    -கேயார்

    ReplyDelete
  2. நன்றி கேயார்

    காதலல் பலவும் அடங்கும் அவையாவுமே மீண்டும் முங்கச்சொல்லும் வகையே காதல் பிரிவும் சேர்த்து

    ஜேகே

    ReplyDelete