Saturday, September 17, 2011

மழைத்துளி

கடலில் சேர உருத்தெரியாது போகும்...
நிலத்தில் விழ மறைந்து போகும்...
கழிவில் விழ கழிவாகும்...

சிப்பிக்குள் விழ முத்தாகும்...
காரிகை முதல் கடவுள் வரை
அலங்கரிக்கும் சொத்தாகும்..!!

சேருமிடம் பொறுத்தே
மழைத்துளிக்கு கூட மகத்துவம்...
மாந்தர் நாம் எம்மாத்திரம்?

தேடி சேர்வோம்...
சேர்ந்தே தேடுவோம்...
நல்லிடத்தை..!!

5 comments:

  1. திருவள்ளுவரின் சிஷ்யராகிட்டீங்க ஜேகே!
    அருமை!

    ReplyDelete
  2. மாத்தி சொல்றீங்க தென்றல்...
    திருவள்ளுவர் ஜே கே-வுக்கு சிஷயர் ஆயிட்டாரு...

    -கேயார்

    ReplyDelete
  3. ஹ ஹ ஹா....அருமை கேயார்....வாழ்த்துக்கள் நண்பர்களுக்கு!

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திகழ்

    தென்றல் நீங்க சிஷ்யன்னு சொன்னதையே எடுத்துக்க முடியலை திருவள்ளுவர்ன்னு பேர் சொல்ற யோக்தை வருவதர்க்கே இன்னும் ஒரு ஜென்மம் வேண்டும் ஒரு பேச்சுக்குன்னு நீங்க சொன்னாக்க இந்த கேயார் ரொம்ப ஓவராத்தான் போறாரு இல்ல?

    நன்றி தென்றல்

    நண்பா

    நீ எதுவேனாலும் சொல்லு ஆனா இந்த மாதிரி எல்லாம் சொன்னா ரொம்ப ஓவரா இருக்கு ஒரு ஓவருக்கு ஆறு பந்துக்கு பதில் பன்னிரென்டு போட்டாப்பல் வேணாம்பா

    ஏத்திவிட்டு ஏத்திவிட்டு உடம்ப ரணகளமாக்கறது வடிவேல் வசனத்தோடு இருக்கட்டும் நண்பா

    நன்றி கேயார்
    ஜேகே

    ReplyDelete