Monday, November 30, 2009

மணிவிழா நாயகன் - 2


முள்ளும் மலரும் (1978)


அண்ணன்-தங்கை பாசம் என்றவுடன் நினைவுக்கு வருவது 'பாச மலர்'; இதற்கடுத்து, பளிச்செனப் பதிவது 'முள்ளும் மலரும்'தான்.

சில காட்சிகளை யாராலும் மறக்க முடியாது!

டிபிகல் தொழிலாளிபோல் 'ஸார் உடனே வரச்சொன்னீங்களாமே' என ஷேவிங் க்ரீம் முகத்துடன் அப்பாவி லுக்-குடன் சரத்பாபு முன் ரஜினி நிற்பது...

ஆஸ்பத்திரியிலிருந்து வரும் ரஜினியை அணைக்கும்போது 'இடது கை' துண்டித்திருப்பதை ஷோபா உணரும்போது...

'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...

படாபட், ரஜினியை மீறி, சரத்பாபுவிடம் ஷோபாவை ஏற்கச் சொல்லும்போது...

'இவ்ளோ பேர் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை; ஏன்னா எந்த நாயும் என்னோட கூடப் பொறக்கலை; ஆனா, வள்ளி நீ....நீயுமா என்னை விட்டு போறே?' என ஷோபாவிடம் நெகிழும்போது...

ரஜினி என்கிற குணச்சித்திர நடிகருக்குக்கான அஸ்திவாரம் இங்கேதான் ஆரம்பம்!

படத்திற்கு 'ரஜினி'தான் 'காளி' என்பதைத் தீர்மானித்து, தயாரிப்பாளர் வேணு செட்டியாரிடம் இயக்குநர் மகேந்திரன் சொன்னபோது,

'என்ன விளையாடுறியா? வில்லனா நடிக்கிற ஆளு; நல்ல கறுப்பு வேறே...வேணவே வேணாம். வேற யாராச்சும் சொல்லு.'


இதே வேணு செட்டியார் டபுள் பாஸிட்டிவ் பார்த்து விட்டு "அடப்பாவி! என் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுட்டியே...படத்துல வசனமே இல்லே...அங்கே ஒண்ணு...இங்கே ஒண்ணு வருது வசனம்..படமா எடுத்திருக்கே..." என்று இயக்குநரைத் திட்டித்தீர்த்து விட்டார்!

படம் வந்த முதல் மூன்று வாரங்கள் பரபரப்பேயில்லாமிலிருக்க, 'படத்திற்கு இன்னும் நன்றாய் பப்ளிசிட்டி பண்ணுங்க' என ரஜினியும், மகேந்திரனும் கெஞ்ச, வேணு செட்டியார் சொன்னார்: "ஓடாத படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை...ஓடுகிற படத்திற்கும் பப்ளிசிடி தேவையில்லை. அது தெரியுமா, உங்களுக்கு?!'

உண்மைதானே? நான்காவது வாரத்திலிருந்து துவங்கிய ஆரவாரம் நூறாவது நாள் வரை ஓயத்தான் இல்லை!

தகவல்களுக்கு நன்றி:
சினிமாவும், நானும் - இயக்குநர் மகேந்திரன்

6 comments:

  1. பல நல்ல படங்கள் வந்தவுடன் பெரிதாக மக்களால் அங்கீகரிக்கப் படாமல் பின்னர் ஓடுவது தான் தமிழ் சினிமாவின் தலையெழுத்து. அதற்கு தலைவரும் விதிவிலக்கல்ல..

    ReplyDelete
  2. //
    பல நல்ல படங்கள் வந்தவுடன் பெரிதாக மக்களால் அங்கீகரிக்கப் படாமல் பின்னர் ஓடுவது தான் தமிழ் சினிமாவின் தலையெழுத்து.
    //
    சரியாச் சொன்னீங்க

    ReplyDelete
  3. ரஜினி சொன்ன முதல் பஞ்ச் டையலாக் இது தான்
    'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' பாடல்களை மறந்து விட்டீர்கள். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல

    ReplyDelete
  4. இதே மாதிரி selective ஆன படங்கள் குறித்து தொடரவும். நன்றி.இதுவும் கூட எனது பட்டியலில் உள்ள படங்களில் ஒன்று.

    ReplyDelete
  5. @புலவரே

    உண்மைதான்

    @தியா

    நன்றி!

    @தமிழுதயம்

    பஞ்ச் டையலாக் - அடேங்கப்பா!

    பாடல்கள் பற்றி குறிப்பிடாதது தவறுதான், திருத்திக்கொள்கிறோம்!

    @கல்யாணி சுரேஷ்

    அடுத்தடுத்து உங்கள் செலக்ஷனில் உள்ள படங்களே வரும், சந்தோஷம்தானே?!

    -இன்றைய கவிதை அன்பர்கள்

    ReplyDelete
  6. 'ரெண்டு கையும் ரெண்டு காலும் இல்லன்னாகூட காளி பொழைச்சுக்குவான் ஸார்! கெட்ட பையன் ஸார் அவன்!' என சரத்பாபுவிடம் ரஜினி பொருமும்போது...


    ரஜினி சொல்லும் இந்த வசனம் எனக்கும் பிடிக்கும். இப்போதெல்லாம் ரஜினி அப்படி நடிப்பதேயில்லை

    ReplyDelete