Thursday, November 26, 2009

மணிவிழா நாயகன் - 1

மணிவிழா நாயகன் என்கிற தொடர் பதிவில், ரஜினி என்கிற கலைஞனைப் பற்றிய எங்கள் கண்ணோட்டங்கள் இடம்பெறும். மற்றபடி அரசியலில் அவருடைய நிலைப்பாடுகள், இன்னபிற விஷயங்களில் எங்களுக்கு ஆர்வம் இருந்ததேயில்லை.

புவனா ஒரு கேள்விக்குறி (1977)


மகரிஷி எழுதிய நாவலைப் படமாக்க முற்பட்டபோது, இயக்குநர் எஸ் பி முத்துராமன், திரைக்கதை வசனகர்த்தா பஞ்சு அருணாச்சலத்திற்கும் தோன்றிய 'வில்லனா நடிக்கற 'புதுப்பையனை' ஹீரோவாகவும், கதாநாயகனா எஸ்டாப்ளிஷான சிவக்குமாரை வில்லனாகவும் மாத்திப் போட்டா என்ன?' தான் ரஜினி எனும் நாயகன் உருவாகக் காரணமாயிருந்தது.

சம்பத் என்கிற இளைஞனாக, காதலை இழந்த காதலனாக, சந்தர்ப்பவசத்தால் தன்னை இழந்த நாயகிக்குக் கணவனாக, குடித்துக்குடித்து உடலை வருத்திக்கொள்ளும் நோயாளியாக, ரஜினியை மாற்றிய பெருமை நிச்சயம் இயக்குநர் எஸ் பி எம்-க்கு உண்டு. அதிலும் சிகரெட்டைப் புகைத்தபின், சாம்பலைச் சுண்டும் ரஜினி ஸ்டைல் அடேங்கப்பா!

படப்பிடிப்பின் முதல் நாளில் தனக்கு நீட்டப்பட்ட வசனங்களைப் பார்த்துவிட்டு 'பாலச்சந்தர் ஸார் ஒரு முழுப்படத்துக்கே இவ்ளோ டயலாக் தரமாட்டார். எந்த நம்பிக்கையிலே எனக்கு இவ்ளோ தர்றீங்க. ரொம்ப கஷ்டம், என்ன விட்டுடுங்க' எனத் தப்பிக்க நினைத்த ரஜினியைச் சமாதானப்படுத்தி நடிக்க வைத்த புண்ணியமும் எஸ் பி எம்-க்குத்தான்!

ரஜினியால் தன்னுடைய காதலியைக் காப்பாற்ற முடியாமல் போவது, எங்களுக்குத் தெரிந்து இந்த ஒரு படத்தில் மட்டும்தான்!

நடிகர் திரு சிவகுமார் அவர்கள் கூறியது போல 'அதிர்ஷ்டம் வாயிற்கதவைத் திறந்து, ஆரத்தியை எடுத்து, ரஜினியை வரவேற்கத் துவங்கிவிட்ட காலகட்டம் அது!'

தகவல்களுக்கு நன்றி:
ஏவி.எம். தந்த எஸ்.பி.எம் - விகடன் பிரசுரம்
இது ராஜபாட்டை அல்ல - அல்லையன்ஸ்

8 comments:

  1. பழைய மெத்தையில் புதிய கள்

    ReplyDelete
  2. பாராட்டுறீயளா, கலாக்கிறீயளான்னு தெர்லியே தியா?!

    முதல் பின்னூட்டத்திற்கு நன்றி!

    -கேயார்

    ReplyDelete
  3. தலைவரப் பத்தி தொடர்ந்து எழுதுங்க...நெறைய தெரிஞ்சுக்கனும்..

    ReplyDelete
  4. நன்றி! புலவரே!
    எங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து
    கொள்ளுதலே இந்த முயற்சி!

    -கேயார்

    ReplyDelete
  5. ரஜினி படங்களிலேயே புவனா ஒரு ? அற்புதமான படம். ராஜா என்பார்..
    மந்தரி என்பார்.. ராஜ்யம் இல்லை ஆழ... ஒரு ராணியும் வாழ.. அற்புதமான பாடல் அமைய பெற்ற படம். இந்த படத்தில் ரஜினிக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்ப்பினால்- பிற்பாடு ரஜினியோடு நடிப்பதை சிவக்குமார் என்பது உப தகவல்.

    ReplyDelete
  6. நன்றி தமிழோதயம்!

    உங்கள் ரசனையும் எங்களோடு ஒத்துப் போவது மகிழ்ச்சியைத் தருகிறது.

    -கேயார்

    ReplyDelete
  7. "புவனா ஒரு கேள்விக்குறி" எனக்கு பிடித்த ரஜினி படங்களின் வரிசையில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  8. @கல்யாணி சுரேஷ்

    மிக்க நன்றி!
    எங்களுக்கு மிகப் பிடித்தது உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சியே!

    -கேயார்

    ReplyDelete