Sunday, November 8, 2009

அடேங்கப்பாவும், அட போங்கப்பாவும்!

பா. ரா! வம்புல மாட்டி விட்டுட்டீயளே!


விதி-1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள் இருந்தாகவேண்டும் என்பது இந்தத் தொடரின் விதி!

விதி-2 . அழைக்கப்படுவர்களின் எண்ணிக்கை குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

விதி-3 . பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும்.

அடேங்கப்பா!

அரசியல்: ஜீவா, கக்கன்
எழுத்து: சுஜாதா, ஸ்டெல்லா புரூஸ், என் சொக்கன், நா பார்த்தசாரதி
கவிதை: மகாகவி பாரதி, கவியரசர் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார், மருதகாசி, கா மு ஷெரீ·ப்
நடிகர்: என் எஸ் கிருஷ்ணன், நாகேஷ், சிவாஜி கணேசன், எஸ் எஸ் ஆர், ரகுவரன்
நடிகை: சரோஜாதேவி, ஸ்ரீதேவி, பானுப்ரியா, த்ரிஷா, தமன்னா (ஹி..ஹி)
இயக்கம்: பாலசந்தர், ஸ்ரீதர்
இசை: கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வி குமார், எஸ் பி பாலசுப்ரமணியன், சங்கர் கணேஷ்
கிரிக்கெட்: ஸ்ரீகாந்த்
ஊர்கள்: திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்
சமையல்: அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்!

அட போங்கப்பா!

அரசியல்: கலைஞர், சோனியா
எழுத்து: யாருமில்லீங்கோ!
கவிதை: பா விஜய்
நடிகர்: இளைய / குட்டி / புரட்சி தளபதிகள் (கண்டுபிடிங்கோ!)
நடிகை: கொல்லங்குடி கருப்பாயி, பரவை முனிம்மா (அடிக்காதீங்கோ!)
இயக்கம்: அகத்தியன் (நிறைய எதிர்பார்த்து ஏமாந்தது), மணிரத்னம் (ரெண்டு வார்த்தை வசனங்களால்!)
இசை: யாருமில்லீங்கோ!
கிரிக்கெட்: எல் சிவராமகிருஷ்ணன் (வாய்ப்புகளை கோட்டை விட்டதற்காக!)
ஊர்கள்: சிங்காரச் சென்னை!
சமையல்: நானே செய்ய நேரிடும்போது!

ஜே கே, வார்த்தை தவறிவிட்டாயே நண்பா!!

7 comments:

 1. நண்பர்களுக்கு,
  எனது கவிதைக்கு தங்களின் வலைப்பூவில் இடமளித்தமைக்கு மிக்க நன்றி...

  காலம் நம்மை
  நெருங்கிய நண்பர்களாக்குமென்ற
  நம்பிக்கையோடு,
  நாவிஷ் செந்தில்குமார்.

  ReplyDelete
 2. பட்டியல் நல்லாருக்கு!
  நாவிஷ் செந்தில்குமார் கவிதை அருமை...பூங்கொத்து!

  ReplyDelete
 3. நன்றி! செந்தில் மற்றும் அருணா!
  முதன்முறை வருகைக்கு நன்றி....

  செந்தில், மற்றவர்களுக்காக உங்கள் கவிதை மீண்டும் அரங்கேறியிருக்கிறது!


  "சாப்பிட்டேன்" என

  அம்மாவிடமும்

  "கவலைப்பட வில்லை" என

  அப்பாவிடமும்

  "அடுத்த மாதத்திற்குள்

  வேலை வாங்கிவிடுவேன்"

  என அண்ணனிடமும்

  "முதல் மாதச் சம்பளத்தில்

  உனக்கொரு மடிக்கணினி" என

  தங்கையிடமும் சொல்ல முடிந்தது...

  "காலையிலிருந்து சாப்பிடல…

  ரொம்பப் பசிக்குதுடா,

  ஏதாவது வாங்கிக்கொடு"

  என நண்பனிடம் மட்டும் தான்

  கேட்க முடிந்தது...

  -கேயார்

  ReplyDelete
 4. //நடிகை: சரோஜாதேவி, ஸ்ரீதேவி, பானுப்ரியா, த்ரிஷா, தமன்னா (ஹி..ஹி)

  ஹலோ யாருமே நமீதாவ சொல்ல மாட்டுறீங்க. இந்த பதிவுகள் எதுவுமே செல்லாது.

  ReplyDelete
 5. ஹா..ஹா..தலைப்பு அருமை கேயார்.மிகுந்த அன்பும் நன்றியும்!

  ReplyDelete
 6. பட்டியல் நல்லாருக்கு!

  ReplyDelete
 7. //இசை: கே வி மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, வி குமார், எஸ் பி பாலசுப்ரமணியன், சங்கர் கணேஷ்//

  வி.குமார் அவர்களும் உங்கள் பட்டியலில் இருப்பதை கண்டு மகிழ்ந்தேன். அருமையான பதிவு.

  செந்தில் அவர்களின் கவிதை மிக அருமை. ரசித்தேன்.

  ReplyDelete