Sunday, November 15, 2009

ப்ரயாணம்!

பரந்து விரிந்த பாலையாய்
மாட்டுவண்டித் தடங்களூடே
நடந்துபோன மனிதர்களின்
காலடித் தடங்களைக்
கலைக்காமல் வைத்திருந்து
கடந்துபோனதொரு
பெயர் தெரியாத ஆறு.

சற்று முன் கூட வந்து
சட்டென்று திரும்பி
வேறெங்கோ செல்லும்
இருப்புப் பாதையொன்று.

ஒரு நவீன ஓவியம் போலும்
கலைந்து கூடும் மேகப் பொதிகளின்
பின்னணியில் மாலை வெயிலினூடே
நீண்ட நிழல் சிலுவைகளோடு
சற்றே பயங்காட்டி மறையும்
கல்லறைக் கூட்டம்.

என்னைப் போல் எதிரே
அமர்ந்தவருக்கும் இக்காட்சிகள்
வாய்த்திருக்குமோ என்று
விசனத்தில் நான்!

8 comments:

  1. ரொம்ப பிடிச்சிருக்கு இந்த கவிதை சந்தர்!மற்ற மூவருக்கும்கூட என் அன்பு நிறைய.

    ReplyDelete
  2. //காலடித் தடங்களைக்
    கலைக்காமல் வைத்திருந்து
    கடந்துபோனதொரு
    பெயர் தெரியாத ஆறு.//

    அருமையா சொன்னீங்க..எனக்குப் பிடித்த வரிகள்

    ReplyDelete
  3. நல்லாருக்குங்கோ.........

    ReplyDelete
  4. ரொம்ப நல்லா இருக்கு.

    //பரந்து விரிந்த பாலையாய்
    மாட்டுவண்டித் தடங்களூடே
    நடந்துபோன மனிதர்களின்
    காலடித் தடங்களைக்
    கலைக்காமல் வைத்திருந்து
    கடந்துபோனதொரு
    பெயர் தெரியாத ஆறு.//

    மணல் லாரி ஓடுற ஆறு கண்ணுக்குள்ள வந்து போகுது.

    ReplyDelete
  5. கவிதை வழியாக சந்தர் ஒரு சிறுகதையும் சொன்னது போல் இருக்கிறது எனக்கு.
    வாழ்த்துக்கள் சந்தர்.

    ReplyDelete
  6. @ பா ரா

    நன்றி! தங்கள் அன்புக்கும் வணக்கம் பல!


    @ புலவரே!

    ரசித்தமைக்கு நன்றி!


    @ ஊடகன்

    ரொம்ப சந்தோசமுங்கோ!


    @ கல்யாணி சுரேஷ்

    நீங்கள் இதை ரொம்பவும் ரசித்திருப்பீர்கள் என எங்களுக்குத் தெரியும்! அதையே பின்னூட்டமாக்கி எங்களது நம்பிக்கையை மெய்த்ததற்கு நன்றி!


    @ வேல்கண்ணன்

    தங்களது வாழ்த்துக்களை இனிதே பெற்றுக்கொள்கிறோம்!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete
  7. //என்னைப் போல் எதிரே
    அமர்ந்தவருக்கும் இக்காட்சிகள்
    வாய்த்திருக்குமோ//எனக்கும் கூட..

    ReplyDelete
  8. @சிவாஜி சங்கர்

    வருகைக்கும் பதிவுக்கும் ரசிப்புக்கும் நன்றி!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete