Friday, November 20, 2009

ஜே கே-வுக்கு எது பிடிக்கும், பிடிக்காது?!

பொது வாய்ப்பு அளித்த பா ரா விற்கு நன்றி!!

அரசியல்:

பிடித்தது இந்திய அரசியலில் இளைஞர்கள்.

பிடிக்காதது ஜோதி பாசு, கருணாநிதி , வாஜ்பாய் என நடக்க கூட முடியாது இன்னமும் அரசியலில் இருக்கும் மூதறிஞர்களையும் அவர்களின் சுயசெயலையும்.

எழுத்து:

பிடித்தது சுஜாதா, ஜெயகாந்தன், பாலகுமாரன், சொல்லிக்கொண்டே போகலாம்.

பிடிக்காதது தமிழ் என்று வந்து விட்டால் எல்லாம் சுகமே; பிடிக்காதது ஏதுமில்லை.

கவிதை:

பிடித்தது நம் இணையதள நண்பர்களின் கவிதைகள் (புகழ்பெற்ற அனைவரையும் விதிவிலக்காய் தள்ளிவைத்து அவங்களை பிடிக்கும் பிடிக்கலைன்னு சொல்ல முடியாதுப்பா!!) .

பிடிக்காதது நம் நண்பர்கள் போன்று எழுத முனையும் போது, என்னை!

நடிகர்:

பிடித்தது ப்ருத்விராஜ், நானா படேகர், நாசர் , பிரகாஷ் ராஜ் (ரொம்ப சாதாரணமாய் நடிப்பவர்கள் -man next door).

பிடிக்காதது கமல், சிவாஜி , ரஜினி, அமிதாப் இவர்கள் எல்லை தாண்டி வயதிற்கு ஒப்பாமல் நடிக்கும் பொழுது.

நடிகை:

பிடித்தது நமிதா! (விநாயக முருகனுக்காக!) எல்லாரையும் பிடிக்கும்! (ஹிஹிஹி!)

பிடிக்காதது இப்பொழுது வரும் பெரும்பான்மையான புதுமுகங்களை!

இயக்கம்:

பிடித்தது மணிரத்னம், மிஷ்கின்.

பிடிக்காதது ராம் நாராயணன் (இவர் எப்படியும் மிருகத்தை வச்சு தான் எடுப்பார் இதுல் சேர்த்துகலாமா? ) .

இசை:

பிடிக்காததுன்னு ஏதுமில்லை.

கிரிக்கெட்:

பிடித்தது மொத்தமாக இந்திய அணி யார் ஆடினாலும் நாக்கை தொங்க போட்டு பார்ப்பேன்.

பிடிக்காதது அதே இந்திய அணி தான் ரொம்ப காலமா ஜெயிக்கற மாதிரி பாவ்லா காட்டி விட்டு தோற்பது.

ஊர்கள்:

பிடித்தது பல தமிழ் நாட்டு கிராம்ங்கள் மனதில் நின்றாலும் சுந்தர பாண்டியபுரம் புல்லாந்திட்டும், ஆறும் , சென்னையும்.

பிடிக்காதது வட ஆறகாடு சாயல்குடி, முதுகுளத்தூர் பக்கம் ரொம்ப வறண்டு இருக்கும்.

சமையல்:

பிடித்தது அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்! (இத மாத்தி சொல்லி யாரு வாங்கி கட்டிக்கறது?!) .

பிடிக்காதது நல்லா பசிக்கும் போது இவங்களே சொதப்பி நம்மள சாவடிக்க, நாம் சிரித்துக்கொண்டே விழுங்கும் போது..!

7 comments:

  1. //நடிகை:

    பிடித்தது நமிதா! (விநாயக முருகனுக்காக!)
    இதுதான் பக்கத்து இலைக்கு பாயாசம் கேட்கறதுங்கறதா?

    //சமையல்:

    பிடித்தது அம்மா/மாமி/தங்கச்சி கைகளால் என்ன செய்தாலும்! (இத மாத்தி சொல்லி யாரு வாங்கி கட்டிக்கறது?!) .//
    அந்த பயம் இருக்கட்டும்.

    ReplyDelete
  2. மிக அருமை நல்ல தெரிவுகள் நண்பா

    http://theyaa.blogspot.com/2009/11/blog-post_20.html

    இதையும் கொஞ்சம் பாருங்கள்

    ReplyDelete
  3. நமிதா! (விநாயக முருகனுக்காக!) எல்லாரையும் பிடிக்கும்! (ஹிஹிஹி!)

    :-))))))

    ReplyDelete
  4. நமீதாவின் உயரம் 5 அடி 11 அங்குலம்... நான் 5 அடி 5 அங்குலம். நமீதா முன் சென்று நான் கைகுலுக்கினா‌‌‌ல் என் முகம் இடிக்கும் அளவு இருக்கின்றேன். நமீதாவுடன் என்னை சேர்த்து டேமேஜ் ஆக்கிபுட்டீங்களே.

    ReplyDelete
  5. இன்னும் சுத்திக் கிட்டே தான் இருக்கு இந்த தொடர்பதிவு..பா.ரா கேட்டதுக்கு தாமதமாத்தான் எழுதிருக்கீங்க..பதில்கள் அருமை.

    ReplyDelete
  6. பிடித்தது நமிதா! (விநாயக முருகனுக்காக!) எல்லாரையும் பிடிக்கும்! (ஹிஹிஹி!) //

    அர்ஜுனா!!

    அர்ஜுனா!!

    ReplyDelete
  7. @கல்யாணி சுரேஷ்

    //சமையல்//
    அப்பத்தானே குடும்பம் இனிக்கும்!

    //நடிகை//
    பக்கத்து இலைக்கு பாயாசம்-னா நமக்கு நெறைய விழுமே! (ஹி!ஹி!)

    @தியா

    நன்றி! தங்களுடைய பதிவைக் கண்டேன்.
    எங்களையும் அங்கீகரித்ததற்கு நன்றி!

    @பா ரா

    நமிதா நாயகி?!

    @விநாயக முருகன்

    //என் முகம் இடிக்கும் அளவுக்கு இருக்கின்றேன்.//

    எங்க இடிக்கும்?!

    @புலவரே

    உண்மைதான். ஜே கே லேட்டு / கேயார் பர்·பெக்டு!

    @சந்தான சங்கர்

    அர்ஜுனா! அர்ஜுனா!
    வேறென்னத்த சொல்ல?!

    -இன்றைய கவிதை நண்பர்கள்

    ReplyDelete