Wednesday, November 25, 2009

மனிதமும் மல்லிகையும்!

குப்பை லாரியின் பின்னால்
இழுத்துப் புரண்டு சிதைந்து
வாழ்க்கையின் ஏதோ ஒரு
பக்கத்தை நினைவுபடுத்தியபடி
செல்கிறது
நேற்றெங்கோ மணத்த
மல்லிகைச் சரம்.

கவனிக்க மனமின்றி
இயங்குகிறது
காங்க்ரீட் சதுரங்களில்
நசுங்கிக் கசியும்
இயல்பு மறந்த மனிதம்!

4 comments:

  1. மிக நல்ல கவிதை சந்தர்.நால்வருக்கும் என் அன்பு.

    ReplyDelete
  2. கவிதை அருமைங்க...இயல்பு மறந்த மனிதம்..சரியாத்தான் சொன்னீங்க..

    ReplyDelete
  3. ரொம்ப நல்லா இருக்கு

    நன்றி
    ஜேகே

    ReplyDelete