அவசர உலகத்தின்
அனாவசிய டென்ஷன் இல்லாமல்
அதிசயமாய்ப் பழைய டைரியுடன் உட்கார்ந்தேன்...
எழுதிய பக்கங்களை விட
எழுதாத பக்கங்கள் பேசிய கதைகள்...
தட்டுத் தடுமாறி
என் ஷ¥வில் கால் புதைத்து
விளையாடிய
பக்கத்து வீட்டு சிறுமியை
ரசித்து எழுதிய கவிதை...
நட்ட இடமெல்லாம் பூ பூத்து
'அட்ஜஸ்டபிளிடியை' கற்றுக் கொடுத்த
செவந்திப்பூவின் கவிதை...
கடவுளுக்குத் தேர் இருக்கிறது,
கனவான்களுக்குக் கார் இருக்கிறது என்று
கவலைப்படாமல்
கால்கள் இருக்கின்றதென்று
கர்வப்பட்ட
காலத்தின் கதை...
ஒவ்வொரு பக்கமும் நினைவுறுத்திய
கதைகளும் கவிதைகளும்
சொல்லாமல் சொல்லியது
தொலைந்து போன
என் முகத்தின் அடையாளத்தை...
தவறிவிட்ட என் ரசனைகளின் ஆத்மார்த்தத்தை...
இன்று கவிதை
எழுதக்
கருவின்றி
தேடிக் கொண்டு இருக்கின்றேன்
என் டைரிகளில்...!
பழைய நாட்களை நினைக்க வைத்துவிட்டாய்
ReplyDeleteநன்றி நண்பா - ஜேகே
//கடவுளுக்குத் தேர் இருக்கிறது,
ReplyDeleteகனவான்களுக்குக் கார் இருக்கிறது என்று
கவலைப்படாமல்
கால்கள் இருக்கின்றதென்று
கர்வப்பட்ட
காலத்தின் கதை...//
அழகான அர்த்தமுள்ள வரிகள்...
//ஒவ்வொரு பக்கமும் நினைவுறுத்திய
ReplyDeleteகதைகளும் கவிதைகளும்
சொல்லாமல் சொல்லியது
தொலைந்து போன
என் முகத்தின் அடையாளத்தை...
தவறிவிட்ட என் ரசனைகளின் ஆத்மார்த்தத்தை...//
பழைய டைரிகள்தானே நம் வாழ்வின் rewind button . அருமையான பதிவு. நன்றி.