Monday, November 16, 2009

என்றோ எழுதிய கவிதை - 11

கற்பனை கூட பல சமயங்களில்
கிணற்றிலிட்ட
கல் போல அமிழ்ந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
நெஞ்சிலிருக்கும் வார்த்தைகளாய்
உறைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
காகிதங்களில் அச்சாகாமல்
கரைந்து போகிறது!

கற்பனை கூட பல சமயங்களில்
கையில் சிக்காத காற்றாய்
காணாமல் போகிறது!

கற்பனை கூட சில சமயங்களில்
கவிஞனின் கைபட்டு
காவியமாய் மிளிர்கிறது!

11 comments:

  1. எல்லா மனிதனும் கற்பனைவாதிதான்..ஆனால் அந்த கற்பனையின் வடிவம் கவிஞனிடம் தான்..நல்ல கவிதை.

    ReplyDelete
  2. //கற்பனை கூட பல சமயங்களில்
    நெஞ்சிலிருக்கும் வார்த்தைகளாய்
    உறைந்து போகிறது!//

    சில சமயங்களில் மட்டும்
    உருகும்
    உதிரும்
    மழை முடிந்த தென்னங்கீற்றின்
    கடைசி சொட்டுப்போல்.

    ReplyDelete
  3. கற்பனை கூட சில சமயங்களில் விற்பனையாகாமல் தேங்கி போகிறது..

    ReplyDelete
  4. மிக்க நன்றி நண்பா -- மிகவும் ரசித்தேன்

    ஜேகே

    ReplyDelete
  5. //கற்பனை கூட பல சமயங்களில்
    கையில் சிக்காத காற்றாய்
    காணாமல் போகிறது!//

    கற்பனை நல்லாருக்கு நண்பரே.....

    ReplyDelete
  6. ரொம்ப நல்லா இருக்கு கேயார்!
    வாழ்த்துக்கள் மக்கா!

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருக்கு கேயார்!

    ReplyDelete
  8. @ புலவரே!

    உண்மைதான். 'நச்' வரிகளுக்கு நன்றி!

    @ சந்தான சங்கர்

    உங்க கவிதை கலக்ஸ்!

    @ தண்டோரா

    வழக்கம்போல, பஞ்ச் வெச்சி பத்த வெச்சீட்டீங்களே நண்பரே!

    @ JK

    நன்றி!

    @ பாலாசி

    ரசிப்புக்கு நன்றி!

    @ பா ரா

    தங்களுடைய வேலைகளுக்கு நடுவிலும் பின்னூட்டம் இட்டதற்கு நன்றி பல!

    @ கல்யாணி சுரேஷ்

    எல்லாத்தையும் விடாம படிப்பதற்கு நன்றி!

    @ வேல்கண்ணன்

    மெர்சி!

    -கேயார்

    ReplyDelete
  9. கற்பனை வெகு அருமை..

    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  10. @மலிக்கா

    முதன்முறை வருகைக்கு நன்றி!
    அவசியம் உங்கள் வீட்டிற்கு வருகிறேன்!

    -கேயார்

    ReplyDelete