Wednesday, November 11, 2009

என்றோ எழுதிய கவிதை - 10

கரை நிரந்தரமில்லை என
கரை தேடும் அலைக்குத் தெரியும் - என்றாலும்
கரையைத் தழுவி அலுத்தபின்,
கடலில் போய் அலையும் சேரும்!

உறவைத் தேடி அலையும் மனிதா...!
உறவைத் தேடி அலுத்த மனிதா...!
உன்னை நீயே அறிந்து கொண்டால்,
'உறவுமில்லை, பிரிவுமில்லை' என
உறவின் உண்மை புரிந்து விடும்!

6 comments:

  1. உறவின் உண்மை புரிந்தால் எந்த உறவிலும் பிரிவில்லை தான் ...

    நன்றி நண்பா

    ஜேகே

    ReplyDelete
  2. //உன்னை நீயே அறிந்து கொண்டால்,
    'உறவுமில்லை, பிரிவுமில்லை' என//


    உறவுகள் இல்லாத வாழ்க்கை வெறுமைதான்

    ReplyDelete
  3. பிரியமுடன்...வசந்த் said...

    //உன்னை நீயே அறிந்து கொண்டால்,
    'உறவுமில்லை, பிரிவுமில்லை' என//


    உறவுகள் இல்லாத வாழ்க்கை வெறுமைதான்

    ரிப்பீட்டு.

    ReplyDelete
  4. //கரையைத் தழுவி அலுத்தபின்,
    கடலில் போய் அலையும் சேரும்!//

    மனிதனும் அப்படித்தானே....

    நல்ல கவிதை....

    ReplyDelete
  5. நல்ல கவிதை.
    இதற்கு முன்பு 'ஊடல்' தலைப்பிட்ட கவிதையும் நன்று

    ReplyDelete
  6. வாழ்வில் எதுவும் நிரந்தரம் அல்ல

    ReplyDelete