சொத்தும், சுகமும்,
பகையும், கோபமும்,
பகட்டும், கெளரவமும்,
வீண்பிடிவாதமும்,
மனதின் அழுத்தமும்,
இறுதியில் வெறுமையாய்
யாவும் காணாது போகும்!
தெரிந்தும்,அறிந்தும்,
மாறாதிருக்கும்
மனமும், மனிதரும்
உலகில் இருந்தும்
இல்லாதிருக்கும்
வெறுமைபோலன்றோ?
மிகச் சரி
ReplyDeleteஇருந்தும் இல்லாதிருக்கும்...
வெறுமைக்கான வித்தியாசமான சிந்தனை
வார்த்தைகள் நேர்த்தியாய் அமைந்த
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
இல்லாத ஒன்றுக்கான போராட்டமே வாழ்க்கை!
ReplyDelete