Monday, May 9, 2011

ஏகாந்தம்!

காரிருளில் கசிந்திருக்கும்,
காட்டினிடையில் கனிந்திருக்கும்,
ரசிப்பின் ஊடே லயித்திருக்கும்,
ஆளில்லா இடத்தில்
மிகுந்திருக்கும் என்றிடுவார்!
எனக்கோ என்னுள் இருக்கும்
தனிமையிலே தான் ஏகாந்தம்!!

6 comments:

  1. நல்லா வந்து இருக்குது!

    ReplyDelete
  2. கவிதை ஏகாந்தமாக உள்ளது!

    ReplyDelete
  3. நண்பா!

    நம்மைக் கொல்வது தனிமை...!
    ஆயின்..இனிது..இனிது...ஏகாந்தம் இனிது!!

    தனிமையை ஏகாந்தமாக்கிய,
    அதுவும் உள்ளத் தனிமையை...
    உன்னை எப்படி பாராட்டுவதென்று தெரியவில்லை!!

    என்றும் அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  4. @சித்ரா

    உண்மைதான், நண்பர் கை பட்டு எல்லாமே நல்லா வந்து இருக்குது!

    @தென்றல் சரவணன்

    வாழ்க்கையில் எல்லாம் நன்றாக நடந்தால், கவிதையும் ஏகாந்தமாக வந்து விழத்தானே செய்யும்!


    -கேயார்

    ReplyDelete
  5. நன்றி சித்ரா, நன்றி தென்றல்

    கேயார் வாழ்க்கயில் எல்லாம் நடந்தால் என்பது உங்கள் நோக்கு நான் அதையே மாற்றி வாழ்க்கையில் எது நடந்தாலும் கீதையில் கூறியது போல் நல்லதாகவே நடந்த்து என்று கொண்டால் கவிதையும் நல்லதாகவே வருமோ? எது சரியோ உங்களைப்போல் (நீங்கள், சித்ரா, தென்றல்...) ஊக்குவிப்பவர்கள் இருந்தால் ஏகாந்தம் தொடர்ந்திருக்கும் நண்பா

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  6. வசந்தங்கள் வீசட்டும் ...

    ReplyDelete