Sunday, May 8, 2011

அம்மா!

மழலையாய் அவள் முகம்
எனக்கு அன்பு காட்டியது!
விடலையாய் அவள் முகம்
என் வழியை காட்டியது!
பருவமாய் அவள் முகம்
உருவம் காட்டியது
முதுமையில் அவள் முகம்
என்னை காட்டுகிறது!

அம்மா என்ற குரலுக்கும்,
அந்த ஒலிக்கும்,
இன்றும் மழலை போல் தான்
ஓடத்தோன்றுகிறது!

60 வெறும் எண் தானே?- கடந்தாலும்
அவள் என் பெண் தானே?
அம்மா என்ற
சொல்லுக்கு வயதேது?
வருத்தம் என்றால்
தஞ்சமடைய வேறிடமேது?

60ம் 70ம் வந்திருக்கும்
அம்மாவின் அன்பும், பாசமும்
தினமும் தொடர்ந்திருக்கும்,
அவை நிலைத்திருக்கும் என
என் மனமும் இறைவனிடத்தில்
தினமும் சொல்லியிருக்கும்…!

11 comments:

  1. //அம்மா என்ற
    சொல்லுக்கு வயதேது?
    வருத்தம் என்றால்
    தஞ்சமடைய வேறிடமேது?//


    நண்பா! எத்துணை அழகான வரிகள்...
    விழுந்துவிட்டேன்...அம்மாவின் அன்பிலும்...
    உன் கவிதையிலும்!

    -கேயார்

    ReplyDelete
  2. முதுமையில் அவள் முகம்
    என்னைக் காட்டுகிறது...
    சின்ன வரிதான்
    ஆயினும் நிறையச் சொல்லிப்போகிறது
    நல்ல பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இன்றும் மழலை போல் தான்
    ஓடத்தோன்றுகிறது!


    நெஞ்சைத் தொட்ட வரிகள்..
    அழகு!!

    ReplyDelete
  4. அழகான வரிகள்-அம்மா என்றால் தியாகம்,அன்பு,அரவணைப்பு,ஆசி...போய்க்கொண்டே இருக்கும்!

    ReplyDelete
  5. @ரமணி ஸார்!

    வந்தமைக்கும், வாழ்த்துக்களுக்கும் கோடி நன்றி!

    @முனைவர் அவர்களே!

    அம்மா என்றாலே நெஞ்சைத் தொடும் போது,
    வரிகள் தொட்டதில் மிகையில்லை!

    நம் இல்லத்திற்கு வந்தமைக்கு நன்றி!

    @சித்ரா

    exactly!


    @தென்றல் சரவணன்

    அம்மா என்பதற்கு ஈடான வார்த்தைகள் ஏதுமில்லை... வார்த்தைகள் போய்க்கொண்டே தானிருக்கும்!

    -கேயார்

    ReplyDelete
  6. நன்றி கேயார் அது என்னமோ அம்மா என்று நினைத்தால் இது போல் பல தானே நடக்கிறது

    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  7. வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரமணி மிக்க மகிழ்ச்சி

    முனைவரே தங்கள் ஊக்கத்திர்க்கும் வாழ்த்துக்கும் நன்றி தங்கள் வருகைக்கும் மிக்க நன்றி

    ஜேகே

    ReplyDelete
  8. amma enbadhu oru kavithi dhanee..............

    ReplyDelete
  9. en kural kettuthan "thuyil kalaiven" yena nee sonal...
    un veetu sevalaai naan avatharipen...

    ReplyDelete