Wednesday, March 30, 2011

என் பாட்டி!

பொக்கை வாய் கிழவியாய்,
அனுபவத்துக்கத்தை சுகமாய்,
சிரிப்பாய் காட்டியிருப்பாள்,
அமுதோடு, வாழ்வும் ஊட்டி வளர்ப்பாள்!

இறக்கையில் கைகூப்பி
வணக்கம் கூறிச்சென்றவள்!
இறப்பென்பதை எனக்கு
கண்ணில் காட்டியவள்!!

கூடி நின்றவர்
வழி விட்டு வழி அனுப்ப
என்னை விட்டுச்சென்றாள்!
என்னுடன் அவள் பாசம் மட்டும்
விட்டுச்சென்றாள்!

எல்லாருக்கும் ஒர் பாட்டி
இருந்திடல் வேண்டும்!
கொஞ்சலும், வருடலும்,
நேசமும், மன்னிப்பும்
பழகிட என் பாட்டி போல்
ஒருவர் நிச்சயம் வேண்டும்!

4 comments:

  1. பாட்டி சொல்லைத் தட்டாமல் வளர்ந்த பிள்ளைன்னு சொல்லுங்க!
    அம்மாச்சி-அம்மா சொல்ல பிடிக்கும்! நான் கொடுத்து வைக்கவில்லை...
    அப்பாயி-ரொம்ப பிடிக்கும்...உங்கள் அனுபவ வார்த்தைகள் எனக்கும் பொருந்தும்!

    ReplyDelete
  2. இறக்கையில் கைகூப்பி
    வணக்கம் கூறிச்சென்றவள்!
    இறப்பென்பதை எனக்கு
    கண்ணில் காட்டியவள்!!


    ...very touching lines!

    ReplyDelete
  3. பாட்டி கவிதை அருமை.
    பேத்தி, பேரன்களுக்கு நல்லவளாக இருக்கும் பாட்டி, அம்மாவுக்கு மட்டும் சில நேரங்களில் வில்லியாகிவிடுவதுதான் ஏன் என்று புரிந்ததில்லை சிறு வயதில்..(:-))

    ReplyDelete
  4. @தென்றல் - இதைப் பதிவில் இடும்போதே எனக்குத் தெரிந்துவிட்டது, ஜே கே கலக்கிவிட்டார் என!

    @சித்ரா - நானும் இந்த, இந்த இடத்தைத்தான் ரொம்பவும் ரசித்தேன், அட மெய்யாலுமாத்தான் சொல்லுதேன்!

    @செல்வன் - 'வில்லி'க்கான பதில் என்னிடம் இல்லை, ஒருவேளை ஜே கே-வின் அடுத்த கவிதையில் இருக்கலாம்!

    -கேயார்

    ReplyDelete