Tuesday, March 8, 2011

புத்த பாடம்

புத்தனின் கதை கேட்டு
வீட்டுக்கொரு புத்தனை உருவாக்க
நினைத்தான் அரசனொருவன்;
வீட்டுக்கொரு போதி மரம்
வளர்க்கச்சொன்னான்;

ஊரெல்லாம் போதிமர தோப்பாச்சு,
புத்தனாய் யாருமாகவில்லை!
பித்தனாயானான் அரசன்!!

தோப்பின் நிழலில் ஊரின் அழகும்.
மக்களின் உழைப்பும் பெருகும்,
செயல் கண்டான்!
ஞானம் கொண்டான்!!

ஞானம் வர புத்தனுக்கு போதி மரம்;
மனமிருப்பின்
நமக்கு நிழலே போதுமென்றுணர்ந்தான்!!

3 comments:

  1. புத்தனின் கதை நல்ல உழைப்பாளிகளைத் தந்துள்ளது!
    புத்தன் போன்ற ஞானிகளின் கதைகளே போதிமரம் தான் போலும்!

    ReplyDelete
  2. ஞானம் வர புத்தனுக்கு போதி மரம்;
    மனமிருப்பின்
    நமக்கு நிழலே போதுமென்றுணர்ந்தான்!!


    ...super!

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் தென்றல் நன்றி

    வாழ்த்துக்கு நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete