Friday, March 25, 2011

தாழ்ந்திருத்தல்

தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
கோபுரமாய் தானிருந்த போதிலும்
தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
தரந்தாழாதிருந்திடலே போதுமன்றோ!

தாழ்ந்த இடந்தன்னில் தானே
தண்ணீரும் தங்கும் என
தாழ்ந்தே வணங்கிட வேண்டும்,
உயரமாய் இருந்திட்டாலும் உயர்ந்திருந்திட்டாலும்;

வணக்கம் வழங்க வணக்கம் பெறுவோம்
இணக்கம் பெருகும் ஆதலில்
தாழ்ந்திருத்தல் குறையேயில்லை...!

3 comments:

  1. அடங்கி போங்கன்னு சொல்றீக!
    அடக்கம் அமரருள் உய்க்கும்-திருவள்ளுவர் சிந்தனை!

    ReplyDelete
  2. தாழ்ந்திருத்தல் குறையேயில்லை
    தரந்தாழாதிருந்திடலே போதுமன்றோ!


    .......மனத்தாழ்மை உணர்வையும் , தாழ்வு மனப்பான்மை உணர்வையும் சிலர் தவறாக புரிந்து கொண்டு வைத்து இருக்கிறார்கள். நல்ல அர்த்தம் உள்ள கவிதைங்க. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  3. நன்றி தென்றல் அந்த குறளை நினைக்கவில்லை எழுதும் போது நீங்க சொல்லும் போது சந்தோஷமா இருக்கு அடங்கி போவதிலும் சுகமுண்டு தென்றல்

    நன்றி சித்ரா உண்மை தான் தாழ்ந்து போவதையும் தவறாகத்தான் நினைக்கிறார்கள் தாழ்ந்தால் வல்லமை இல்லை என்றே நினைக்கிறார்கள்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete