உடுத்தும் உடை,
நடக்கும் நடை,
படிக்கும் கவிதை,
மலரும் முகம்,
உதட்டுப் புன்னகை,
கனிவுப் பேச்சு,
பரிவுப் பார்வை என
எதிலும் என்னை
அவளிடம் உயர்வாய்க் காட்டும்!
மனதினுள் மட்டும் மறைந்திருக்கும்,
ஆயின் எப்போதும் விழித்திருக்கும்
அந்த 'தீண்டும்' மிருகம்!
உயர்வாய் காட்டிக்கொள்வதே பேருந்து வாழ்க்கை இல்லையா, அதுவும் உள்ளிருக்கும் அந்த தீண்டும் மிருகம் மறைத்து
ReplyDeleteஉண்மைதான் நண்பா
நன்றி கேயார்
மிருகம் என்ன பாவம் செஞ்சது.. அதுவும் நீதானே. அதோடு சமாதானமாகப் போ. அப்போ அது மிருகமில்ல, குழந்தை...
ReplyDeleteஎனக்கு புரியல!
ReplyDelete@நண்பா! - நன்றி!
ReplyDelete@ஸ்ரீதர் - உண்மைதான், மிருகத்தையும் பழக்கிவைத்தால் குழந்தையாகிவிடும்தான். ஆயினும், வரம்பு மீறுதலைச் சில சமயங்களில் மிருகத்தால் தவிர்க்க முடியாததைத்தான் எழுதியிருக்கிறேன்!
@தென்றல் - நீங்கள் உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க...அதான் உங்களுக்குக் கவிதை புரியலை!
உண்மை கவிதை. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDelete/*@தென்றல் - நீங்கள் உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க...அதான் உங்களுக்குக் கவிதை புரியலை!
*/
தென்றல் சரவணன் உண்மையிலேயே ரொம்ப நல்லவங்க...பாருங்க புரியாததிலும் ஒரு சுகம்..
@செல்வன் - வருகைக்கு நன்றி! புரிதலுக்கு நன்றி!
ReplyDeleteஐயோ பாவம் தென்றல்! அவங்களை விட்டுடலாம்!!
-கேயார்