என் தாத்தாவும் பாட்டியும்
என் தந்தையும் தாயும்
கட்டி தழுவி கைப்பிடித்து
மகிழ்ந்து உறவாடி பார்த்ததில்லை
நான் பார்த்ததெல்லாம்
விளிக்க எட்டிப்பார்த்த இருகண்கள்
கதவோரம் கேட்டு நிற்கும்
இட்ட கட்டளை நிறைவேற்றி
மீண்டும் கதவோரம் வேர்த்திருக்கும்
வந்தவர் போகும் வரை ;
காலை முதல் இரவு வரை
கதவோரமே குரலும் பதிலும்
சமையலாய் காப்பியாய் உபசாரமாய்
ஆனாலும் அன்பும் பரிவும் மிக அதிகமென
அந்த கதவோர கண்கள் கூறும்
சங்கதி சொல்லி சந்ததி வளர்க்கும்
காதலின் அர்த்தம் அவ்விருவருக்கு
மட்டுமென இருந்த காலமது
கதவோர காதல் வாழ்ந்த காலமது !
JK,
ReplyDeleteCould not find words to express my feelings! This is ultimate nanbaa!!
Great Work!!
With luv,
KR
நன்றி கேயார் உங்களுக்கு பிடிக்கும் என்று நினைத்தேன்
ReplyDeleteநன்பேண்டா
ஜேகே
ரொம்ப நல்லாயிருக்கு!
ReplyDeleteபுதிய கரு..
ReplyDeleteநன்றி தென்றல்
ReplyDeleteநன்றி செல்வன் இது நான் பார்த்து வள்ர்ந்த கரு
ஜேகே