Tuesday, March 29, 2011

எதிர் பயணம்

வாகனத்தின் திசையெதிரில்
அமர்ந்து எதிர் பயணம்
செய்ததுண்டோ?

காலம் போல் பிம்பங்களும் சாலையும்
நம்மை எதிர்கொண்டு செல்லும்,
காற்றும் நாசியை அடைத்து,
கேசத்தை தடவி வீச்சைக்காட்டும்!
வெற்றித்தோல்வி போல்
யாவும் கடந்து போகும்!

வாழ்வோடு பயணித்தல் உடன்பயணம்,
சர்ச்சையின்றி, சத்தமின்றி போகும்!
எதிர்பயணம் கூச்சலாய், போராட்டமாய்
இறுதியின் இன்பம்
வழிநெடுகிலும் காட்டிச்செல்லும்,
வாழும் நொடி காட்டிச்செல்லும்!

5 comments:

  1. நான் அனுபவிக்கும் பேருந்து பயணத்தை நேரில் பார்த்தது போல் எழுதியுள்ளீர்கள்! நன்றி ஜேகே!
    கேயார் கோவிச்சுக்கிட்டார் போல-அவர் கவிதைகளையும் புரிந்து கொள்கிறேன்...எழுதச்சொல்லுங்கள்!

    ReplyDelete
  2. வாழ்வோடு பயணித்தல் உடன்பயணம்,
    சர்ச்சையின்றி, சத்தமின்றி போகும்!
    எதிர்பயணம் கூச்சலாய், போராட்டமாய்
    இறுதியின் இன்பம்
    வழிநெடுகிலும் காட்டிச்செல்லும்,
    வாழும் நொடி காட்டிச்செல்லும்!

    ... ஆழமான கருத்து. அர்த்தமுள்ள கவிதை.

    ReplyDelete
  3. @தென்றல் - ஜே கே 'சரக்கு' வர்லைன்னா நம்ம கவிதைலேந்து ஒண்ணு எடுத்து வுடுவேன், அம்புட்டுதேன்! எனக்கு கோவமே வராது, வரவே வராது, ஆமாம்:-)


    @சித்ரா - உங்க ரசிப்பு தன்மை என்னையும் அப்பப்போ வியக்க வெக்குது!

    -கேயார்

    ReplyDelete
  4. கேயார் இப்போதான் நிம்மதியா இருக்கு...ஆனா என்ன செய்ய உங்க கவிதையையும் ரசிக்கனும்..சும்மா தமாசுக்குதான்...

    ReplyDelete