Monday, March 28, 2011

உதிர்காலம்

பிறப்புதிர்காலம்,
இறப்புதிர்காலம்
மட்டுமே வாழ்வில்!

இதில்
இறந்த காலம்,
நிகழ்காலம்,
எதிர்காலம்
என பிரிப்பது எதற்கு?

உதிர உதிர பூக்கும்,
பூக்க பூக்க உதிர்வதே
காலத்தின் இரகசியம்!
வாழ்வெல்லாம் உதிர்காலமாய்
இருப்பதே நம் வாழ்வின் அதிசயம்!

10 comments:

  1. நிறைய தத்துவார்த்தமான கவிதைகள் தங்களிடமிருந்து பிறக்க ஆரம்பித்து விட்டன ஜேகே!
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. @தென்றல் - உண்மைதான்! தத்துவம் கொடிகட்டிப் பறக்குது தோழரின் கையில்! ஏனெனில் அவரது நிலை கவலைக்கிடம்!

    -கேயார்

    ReplyDelete
  3. இன்றைய கவிதை said...

    @தென்றல் - உண்மைதான்! தத்துவம் கொடிகட்டிப் பறக்குது தோழரின் கையில்! ஏனெனில் அவரது நிலை கவலைக்கிடம்!

    -கேயார்


    ...... I am sad to hear this. பிரார்த்தனைகளை ஏறெடுக்கிறேன்.

    ReplyDelete
  4. என்ன கேயார் அப்படி சொல்லிட்டீங்க?!
    கவிதையில் கலக்கிட்டு இருக்கிறார் ஜேகே.
    எங்கே உங்கள் கவிதை?!

    ReplyDelete
  5. @சித்ரா - அதெல்லாம் ஒண்ணுமில்ல..ஜே கே நல்லாதான் கீறாரு...எல்லாமே டமாசுதான்!

    @தென்றல் - நான் கவிதை எயுதுவேன்...ஆனா நீங்கதான் 'அண்டர்ஸ்டாண்ட் ஆவுல'ன்னு என்னிய ஆ·ப் ஆக்கிட்டீங்களே!

    -கேயார்

    ReplyDelete
  6. @சித்ரா - அதெல்லாம் ஒண்ணுமில்ல..ஜே கே நல்லாதான் கீறாரு...எல்லாமே டமாசுதான்!


    ...Thats good news! :-))))

    ReplyDelete
  7. தென்றல் , சித்ரா - நான் உண்மையில் கொடுத்து வைத்தவன் தங்களைப்போல் தோழமை கிடைப்பதற்க்கு

    தங்களின் அக்கறையான வார்த்தைகள் மிகவும் சந்தோஷமளித்தது, நன்றி சித்ரா

    ஜேகே

    ReplyDelete
  8. வெய்யில் காலத்துக்கு உகந்தது எது?

    அதாம்பா, ஜே கே, சித்ராவுக்கு வைக்கறது, ஐஸ¤ப்பா!

    -கேயார்

    ReplyDelete
  9. ஒருத்தர் எவ்வளவு பீலிங்கா சொல்றாரு...விடமாட்டீங்களே!
    கொஞ்சம் பொறாமைன்னு நினைக்கிறேன்...கரெக்டா?!!!

    ReplyDelete
  10. @தென்றல் - அடடா! கதை அப்பிடி போவுதா? என்னடா இது வம்பா போச்சுது!

    ஜே கே இதையெலலாம் நம்பாதீங்க, தோழரே!

    -கேயார்

    ReplyDelete