Wednesday, February 23, 2011

நம்பிக்கை

பாலைவனத்தின் சோலை,
ஊனத்திற்கு ஊன்றுகோல்,
ஏளனத்திற்கு எதிர்ச்சொல்,
ஊக்கத்தின் அளவுகோல்,
வாழ்வின் பிறப்பு,
வீழ்வின் மறுபிறப்பு,
என்றும் தீரா அமுதசுரபி!

5 comments:

  1. பாராட்ட வார்த்தையில்லை தோழா!

    என்றேனும் ஓர் நாள் 'கவிதை'சிகரத்தில் உனக்குத் துணையாக நானும் வருவேன் என்கிற நம்பிக்கை
    மட்டும் இப்போதும் என் நெஞ்சினில் உண்டு!

    -கேயார்

    ReplyDelete
  2. ”நம்பிக்கை கொள் அதுவே உன்னை உச்சத்திற்க்கு இட்டுச் செல்லும் நெம்புகோல்”-இது என் தோழி கல்லூரியில் படிக்கும் காலத்தில் எனக்கு எழுதியது.
    கவிதை அழகு!

    ReplyDelete
  3. கவிதை மிக வலுவான நம்பிக்கையை சொல்லுகிறது...

    இரண்டாம் வரியில் முதை சொல்லை தவிர்க்கவும்..... அதை “மாற்று திறனாளி என்றோ... இயலாதவர் என்றோ உடற்குறையாளர் என்றோ குறிப்பிடலாமே”

    பகிர்வுக்கு நன்று

    ReplyDelete
  4. நன்றி கேயார் நீங்கள் எனக்கு முன்னால் அங்கிருப்பீர்கள் என்று நம்புகிறேன்

    நன்றி தென்றல் உங்கள் தோழியின் எழுத்தும் மிக அழகு

    வாழ்த்துக்கு நன்றி சித்ரா

    ஓப்புக்கொள்கிறேன் கருணாகரசு இனி வரும் முயற்சியில் அவ்வாறே பயன்படுத்துவேன் நன்றி கருணாகரசு

    ஜேகே

    ReplyDelete