முழுதாய் இருத்தல் முக்கியமென்றும்,
ஆற்றல் மட்டும் இலக்கென்றும்,
அழித்தலும், அழிவும் நல்லதல்ல என்றே
கற்பித்தேன், மகனிடம் போதித்தேன்;
படைத்ததெல்லாம் அழியுமென்று அறிந்தும்
படைக்கும் இறைவனுக்கு
இதையேன் யாரும் கூறவில்லையென்று?
பதிலாய்க் கேள்வி கேட்டான் தகப்பன் சாமியாய்.
இறைவனை வினவ இயலாது,
மகனுக்கும் பதில் தெரியாது,
போதனை பாதியில் நின்று போக,
விடை தெரியா வினாவாய் கற்றதும்,
அறிந்ததுமே கேள்வியாயிற்று.
புரியாத கேள்வி கேட்டு புயலாய்
சென்று விட்டான்;
விடை தேடும் என் மனதில் மட்டும்
புயல் வீசி ஓயவில்லை!
நண்பா! இது பற்றி எழுதியும், பேசியும் தீர்த்து விட்டோம்! இங்கே தொகுத்திருக்கிறேன்... ரசிக்கப்படும் என்கிற நம்பிக்கையில்!
ReplyDeletehttp://apdipodu.blogspot.com/2011/02/blog-post.html
என்றும் அன்புடன்,
பருப்பு ஆசிரியர்
நன்றி கேயார்
ReplyDeleteஇது என்றும் தொடரும் ஒரு விவாதம்
படைத்ததெல்லாம் அழியுமென்று அறிந்தும்
ReplyDeleteபடைக்கும் இறைவனுக்கு
இதையேன் யாரும் கூறவில்லையென்று?
......எல்லா காரணங்களும் புரிந்து விட்டால், மனிதன் இறைவனாகி விடுவானே!
”குழந்தையும் தெய்வமும் ஒன்று” தெய்வம் கேட்கிற கேள்விக்கு பதிலளிக்க முடியுமா என்ன?
ReplyDeleteஉண்மை தான் சித்ரா,
ReplyDeleteஅழகாய் விவரித்திருக்கீங்க தென்றல் சரவணன்
நன்றி
ஜேகே