அனுபவம் அழிதலில் ஆரம்பம்
இளமை அறிதலில் இளமை அழியும்
முதுமை புரிதலில் வாழ்வே முடியும்
புத்தகம் புரிய அதை முடித்தாலே இயலும்
பிறப்பின் இரகசியம் இதுவே
இறப்பில் தான் புரியும்
பயின்றதும் புரிந்ததும் மீண்டும்
கல்வியாகும் அனுபவம் கேள்வியாகும்
அனுபவம் ஞானமாக
தன்னையே அழித்திட அந்த
ஞானம் அனுபவமாகும்
பயின்றதும் புரிந்ததும் மீண்டும்
ReplyDeleteகல்வியாகும் அனுபவம் கேள்வியாகும்
அனுபவம் ஞானமாக
தன்னையே அழித்திட அந்த
ஞானம் அனுபவமாகும்
.....கருத்தை, அருமையாக சொல்லி இருக்கீங்க... பாராட்டுக்கள்!
ஆம், அனுபவமே முடிவும் ஆரம்பமாகவும் உள்ளது!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி சித்ரா
ReplyDeleteஆமாம் தென்றல் அந்த முடிவு எங்கே எனவும் அந்த ஆரம்பம் எங்கே என தேடுதலும் தான் அதன் அழகே
நன்றி தென்றல்
ஜேகே