பூவாய் பெண் பாவாய்
கண்ணாய் கண்ணிண் மணியாய்
என்னை தாங்கினாய்!
மங்கையாய் நங்கையாய்
எனை பெற்றெடுத்தாய்!
தங்கையாய், தமக்கையாய்
உடன்பிறந்தாய், ஆயுளாய் என்னுடனிருந்தாய்!
தாரமாய், ஆதாரமாய்
என்னை கரம் பிடித்தாய்!
என் வாழ்வாய் என் சிரம் தந்தாய்!
வித்தாய் விழுதாய் என் மகளாய்
நீ பிறந்தாய்!
ஆரமாய் பூப்பாரமாய் என்னை
அளந்தாய்!!
சுகமாய் எனக்கிருக்கையில் நீ
அதனில் நிழலாய் இருந்தாய்!
துக்கமாய் எனக்கிருக்கையில் நீ
தூணாய் அங்கிருந்தாய்!!
பிறப்பாய் இறப்பாய் என்னில் நீ
ஆதியாய் அந்தமாயிருந்தாய்!
என் மூலமாய் எனக்கு
வாழ்வாயிருந்தாய்!
என் வாழ்வாய் இருந்தாய்!!
பெண்மையை மிக அழகாய் போற்றியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஒரு தோழியாய் மனம் நெகிழ்கிறது!
நன்றி! வாழ்த்துக்கள்!
சிந்தனை சிறப்பு வாழ்துக்கள்
ReplyDeleteமிக்க நன்றி தென்றல் தோழியை சொல்ல விட்டு விட்டேன் அடுத்த முறை அதையும் சேர்த்து சொல்கிறேன்
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு நன்றி அரசன்