Friday, October 7, 2011

காதலன் காதலியை வர்ணித்தல்..

கண்

என் முகம் காட்டும்,
அவள் மனம் காட்டும்,
மதி மயக்கும்,
விடாது என்னை
கட்டியிழுக்கும்!

நாசி

காற்றாய், மூச்சாய்
அவள் நாசியில்...
பின் காதலாய்,
காதலின் நினைவாய் ஆனது!

செவி

இருபக்கமும் பளபளக்க
தோடாய் தொங்கவிட்டு
வருவதில்,
என் மனதும்
தொங்கிப்போகுமதில்!


வாய்

மதுரமாய் மொழியாகும்
முத்தாய் சிரிப்பாகும்
மொத்தமாய் அள்ளிப்போகும்

காதல் தருவாயின்,
வாழ்வு தரும் வாயிலாய்...
வாழ்வின் வாசலாய்..!

4 comments:

  1. //மதுரமாய் மொழியாகும்
    முத்தாய் சிரிப்பாகும்
    மொத்தமாய் அள்ளிப்போகும் //

    காதலி, சரி...!
    கல்யாணம் கட்டிக்கிட்டு, சோடிப்புறா ஆனா பின்னாலும் கூட...அள்ளிகிட்டு போவுமா?!

    இப்டியே வர்ணனையை தொடர்ந்தீங்கன்னா நல்லா இருக்கும்...ஹி..ஹி..!

    -கேயார்

    ReplyDelete
  2. வர்ணனை ஜாலம் நல்லாயிருக்கு!

    ReplyDelete
  3. @நன்றி தென்றல் - ஜே கே பூஜை லீவுக்கு போயிட்டு அப்டியே ஜூட் விட்டுட்டாரு...:-(

    -கேயார்

    ReplyDelete
  4. நன்றி தென்றல் ஜூட் விடலை உடம்பு சுகமாயில்ல கொஞ்சம் அயர்ச்சி வேலை பளு என எல்லாம் சேர்ந்துவிட்டது
    தங்களது தொடர்ந்த வருகைக்கும் ஊக்கத்திர்க்கும் மிக்க நன்றி

    ஜேகே

    ReplyDelete