Friday, October 14, 2011

தர்மம்

தீராது தந்தும் தருமனுக்கு
வாராதிருந்த தர்மம்..

போறாது என்று கேட்ட
கண்ணனுக்கு அசராது
கர்ணன் தந்திட்ட தர்மம்..

கேளாத குசேலனை
பிடிஅவலினில் குபேரனாய்
ஆக்கிய தர்மம்..

பலன் தேடாத செய்கையிலே,
யாருக்கும் சேர்ந்திருக்கும்..!

5 comments:

  1. இடமறியாது, வலம் தரும் தர்மம் தலை காக்கும்...
    தக்க சமயத்தில் உயிர் காக்கும்...!

    நன்று சொன்னீர் தோழரே...!

    -கேயார்

    ReplyDelete
  2. கேயார் நான் சொல்ல வந்ததை( “தர்மம் தலை காக்கும்”) நீங்க சொல்லிட்டிங்க!
    Great people think alike-சரியா....

    ReplyDelete
  3. தென்றல் - என்ன என்னமோ இங்க்லீபீசு-ல சொல்றீய...பிரிய மாட்டேங்குதே...!
    ஜே கே - தமிழ்ல மாத்துப்பா...

    -கேயார்

    ReplyDelete
  4. பாவம் ஜேகே பிசியா இருப்பார். நானே சொல்லிடுறேன்.... நம்மல மாதிரி அறிவாளியெல்லாம் ஒரே மாதிரி சிந்திச்சிருக்கோம்னு(!) சொல்லியிருக்கேன்பா....புரியாத மாதிரி நடிக்கிறதுலயும் ஒரு திறமை இருக்க தான் செய்யுது!!!!

    ReplyDelete
  5. நன்றி கேயார்

    தென்றல் நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க புரியாத மாதிரி நடிக்கறதுல கேயார் கை தேர்ந்தவர் அவர மாதிரி கலாட்டா பண்றதுக்கும் முடியாது

    இது வரைக்கும் எங்களிடம் தான் வச்சுபார் இப்போ உங்களையும் சேர்த்துக்கறதுல் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி

    நன்றி
    ஜேகே

    பிகு: இது எங்கள் அலுவலகத்தில் வருட கடைசி மாதம் கொஞ்சம் வேலை அதிமாக உள்ளது எப்படியாவது தினம் ஒரு கவிதை படைக்க முயல்வேன் முடியாத போது கேயார் கை கொடுப்பார்

    நன்றி

    ReplyDelete