Monday, October 3, 2011

காதலில் இருந்ததென்ன...?

வானவில்லாய் வந்ததென்ன...
வண்ணத்துப்பூச்சியாய் பறந்ததென்ன...

மனதை அள்ளிச் சென்றதென்ன..
நெஞ்சைக் கிள்ளிப் போனதென்ன..

மாற்றான் கைப் பிடித்ததென்ன...
சொல்லாமல் கொன்றதென்ன...

பித்துப் பிடித்ததென்ன...
செத்து வாழ்வதென்ன..

கேள்வியாய் நின்றதென்ன...
கேலியாய் ஆனதென்ன...

காதலில் இருந்ததென்ன...
காதலி போன பின்ன..?

6 comments:

  1. காதல் வெற்றி குறித்து படைக்கப் படுகிற
    கவிதைகளை விட
    தோல்வி குறித்து வடிக்கிற கவிதைகளே
    சிறப்பாக அமைந்து விடுகின்றன
    அதற்கு என்ன காரணமாய் இருக்கக் கூடும் ?
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்ன என்னவோ எழுதி, காதல் தோல்வியை சொல்லியாச்சு!

    ReplyDelete
  3. பின்னீட்டீங்க கேயார்

    காதலில் இருந்ததென்ன
    காதலி போன பின்ன...? காதலி போனால் என்ன கேயார் காதல் போகதில்லையா

    அருமை கேயார்

    நன்றி
    ஜேகே

    ReplyDelete
  4. @நன்றி திரு ரமணி அவர்களே - உண்மைதான்...! காதல் தோல்வி பிடித்துப் போய்த்தான் அதே பாணியில் எழுதிக் கொண்டிருக்கிறேன்...

    -கேயார்

    ReplyDelete
  5. @தென்றல் - என்னென்னவோ சொல்ல வந்து, என்னென்னோவோ எழுதியதென்ன...

    -கேயார்

    ReplyDelete
  6. @நண்பா - இப்படி யோசித்துப்பார்....காதலியே போன பின்ன, காதலில் இருந்தது என்ன?!...நன்றி நண்பா...உன் ஊக்கத்திற்கு!

    -கேயார்

    ReplyDelete