Monday, August 22, 2011

சிரித்திருப்போம்!

முன் ஜன்ம பகைதனை
மனதிலிருத்தி,
பின்னொரு ஜன்மமதிலே
பழிதீர்க்கும் படலம்...
இதிகாசமாய், புராணமாய்
படித்தறிந்தேன்...

எந்த ஜன்ம
பகைதீர்க்க
பிறந்திட்டேனோ அறிகிலேன்...
பிறந்த பகை தீர்க்க,
நேரமில்லையிங்கு...
முன் ஜன்ம பகை தீர்ப்பதேது?

இறப்பறிந்த பிறப்பிது ஆதலிலே
வாழ்வின் பகை அறுப்போம்...
இறப்பின் பகை தொடுத்தே,
புன்னகை போராட்டம் வளர்ப்போம்...!

பின் ஜன்மமில்லா பிறப்பாய் ஆக,
இந்த ஜன்மம் எல்லாம் சிரித்திருப்போம்!!

6 comments:

  1. பின் ஜன்மமில்லா பிறப்பாய் ஆக,
    இந்த ஜன்மம் எல்லாம் சிரித்திருப்போம்!!//


    அவதாரத் திரு நாளில் அது குறித்த
    மாறுபட்ட சிந்தனை அழகிய கவிதையாக..
    அற்புதமான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பின் ஜன்மமில்லா பிறப்பாய் ஆக,
    இந்த ஜன்மம் எல்லாம் சிரித்திருப்போம்!!/


    சிரிக்க முயல சிரிப்பே வருதில்லையே...hahaha
    அழகான கவிதை..
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. ''...இறப்பின் பகை தொடுத்தே,
    புன்னகை போராட்டம் வளர்ப்போம்...!

    பின் ஜன்மமில்லா பிறப்பாய் ஆக,
    இந்த ஜன்மம் எல்லாம் சிரித்திருப்போம்!!..'
    நல்ல வரிகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  4. புன்னகை போராட்டம் வளர்ப்போம்...!


    ....Super! Super! Super!!!

    ReplyDelete
  5. புன்னகை எனும் பொன்னகையை காப்போம்!

    ReplyDelete
  6. நன்றி ரமணி

    சிரிக்க சிரிக்க மேலும் சிரிப்பு நிச்சயம் வரும் நண்பரே , நன்றி விடிவெள்ளி

    வந்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றி வேதா இலங்காதிலகம் கோவைக்கவி

    நன்றி சித்ரா
    உண்மை தான் தென்றல் அது பொன்னகை தான் இன்றைய விலையில் பொக்கிஷமான பொன்னகை

    நன்றி தென்றல்

    ஜேகே

    ReplyDelete