உதிர்ந்த இலை...
கசக்கும் காய்...
வெம்பிய பழம்...
கால் சூம்பிய சிறுவன்..
நான்காம் பிறைச் சந்திரன்..
சுவற்றிலட்ட சாணம்...
கடல் நீர்...
கை அளையும் மண்...
கால்களை வருடும் அலை...
மிச்சமான நெருப்பு..
அறுந்துபோன செருப்பு...
வாழ்ந்து கெட்டவனின் இருப்பு..
பேருந்துப் புகை...
சாலையின் குப்பை...
காற்றின் மாசு..
தங்காத தூசு...
சொல்லாத சொல்...
எழுதாத வார்த்தை...
நிரம்பாத பக்கம்..
நான் எழுதிய கவிதை....!
கடல் நீர்...
ReplyDeleteகை அளையும் மண்...
கால்களை வருடும் அலை...
தளிர் இலை
சுவையான காய்
பருவத்தில் பழுத்த பழம்
இப்படித்தானே தங்கள் கவிதை உள்ளது?
சின்னஞ்சிறு தூரல்!
ReplyDeleteசில்லென வீசும் தென்றல்!
இதமான வெப்பம்!
உங்கள் கவிதை.
திரு ரமணி மற்றும் முனைவர் அவர்களுக்கு,
ReplyDeleteதோழர் ஜே கே அவர்களைக் களத்தில் விட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவன் நான்...
இதனால்தான், என்றோ எழுதிய கவிதைகளையும், 'நான்' எழுதிய கவிதைகளையும் அக்கம் பக்கம் பார்த்தே வெளியிடுகிறேன்...! ரசித்தமைக்கு நன்றி...
என்றும் அன்புடன்,
கேயார்
கேயார்
ReplyDelete//சொல்லாத சொல்...
எழுதாத வார்த்தை...
நிரம்பாத பக்கம்..//
இது உண்மை தங்கள் கவிதைகளை போல் இன்னும் எழுதுங்கள் எழுதாவிடில் நிரம்பாது இன்றைய கவிதை
இந்த கவிதையும் அழகு
நன்றி கேயார்
ஜேகே
அருமை கலக்குறீங்க
ReplyDeleteதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
சொல்லாத சொல்...அது!
ReplyDeleteஎழுதாத வார்த்தை...அதனால்
நிரம்பாத பக்கம்..ஆனால்
நான் எழுதிய கவிதை....இது!
அருமை ஆத்திச்சூடி போல!
புலவர் சா இராமாநுசம்
@வருகைக்கு நன்றி! தமிழ் தோட்டம்!
ReplyDelete@புலவர் சா இராமநுசம் அவர்களுக்கு,
தங்களுடைய ரசிப்புத் தன்மை எங்களை வியக்க வைக்கிறது. வாழ வைக்கிறது. அவ்வப்போத எழுதவும் வைக்கிறது. மிக்க நன்றி ஐயா!
-கேயார்