என் மன அழுத்தமெல்லாம்
நீரின் அடியில் விட்ட காற்றாய்...
என் கனவெல்லாம்
நீரின் அடியில் இட்ட கண்ணீராய்...
என் பாசமெல்லாம்
நீரின் அடியில் மண்டும் பாசியாய்...
என் உணர்வெல்லாம்
நீரின் அடியில் கிணற்று ஊற்றாய்...
என் எண்ணமெல்லாம்
நீரின் அடியில் அலையாய்...
என் காதலும்
நீரின் அடியில் பளிங்காய்...
என் வாழ்வு மட்டும்
கால பட்ட நீராய்...
பிரதிபலிக்கும் பிம்பமாய்...
அலைந்து, கலைந்தே...
வளர்கிறது!!
நண்பா!
ReplyDeleteஇது பற்றி நிறைய்ய பேசி விட்டோம்...
நிறைவாகவில்லை இன்னும்!
அருமையான கவிதை...
அன்றாட வாழ்விலிருந்து சற்றே 'உயர' நினைக்கும்
சராசரி மனிதன் ஒவ்வொருவனுக்கும் இந்தக் கவிதை பிடிக்கும்...!
இல்லை, வானம்தான் எல்லை உனக்கு!
நீரின் ஆழமும் கவிதைதான் உனக்கு!
என்றும் அன்புடன்,
கேயார்
என் உணர்வெல்லாம்
ReplyDeleteநீரின் அடியில் கிணற்று ஊற்றாய்...
.... இந்த உவமையை மிகவும் ரசித்தேன்.
நல்லாயிருக்கு கவிதையின் சாரம்சம்!
ReplyDeleteநீரின் அடிக்குள் இருப்பதால் கனக்க ஊற்றெடுக்கும்..
ReplyDeleteரசித்தேன்...
நல்ல கவிதை...
வாழ்த்துக்கள்..
HAPPY FRIENDSHIP DAY
நன்றி கேயார்
ReplyDeleteநன்றி சித்ரா , நன்றி தென்றல்
நன்றி விடிவெள்ளி
தங்கள் யாவருக்கும் belated friendship day வாழ்த்துக்கள், வேலை பளு மிக அதிகமாக இருப்பதால் சற்றே தாமதமாக பின்னூட்டதிர்க்கு பதில் தரும்படியாகி விட்டது மன்னிக்கவும்
நன்றி
ஜேகே