மெழுகாய் இருக்கிறேன்
உன்னில் தான் கரைகிறேன்
தன்னை எரித்து
தனக்கே நிழல் தரும்
மெழுகாய் இருக்கிறேன்
சருகாய் ஆகிறேன் நீயின்றி
உதிரும் சருகாய் ஆகிறேன்
தளிராய் இருந்து
வளர்ந்த இடத்தில் மடியும்
சருகாய் ஆகிறேன்
தன் தேனை உயிராய்
தான் கொடுத்தும்
வண்டு கண்டு மிளிரும்
மலராய் மெருகேறி போகிறேன்
உன்னில் சேர்ந்து
மெருகேற்றிக்கொள்கிறேன்...
// மெழுகாய் இருக்கிறேன்
ReplyDeleteஉன்னில் தான் கரைகிறேன்
தன்னை எரித்து
தனக்கே நிழல் தரும்
மெழுகாய் இருக்கிறேன்//
வருவது அறிந்தும் மெழுகு
உருவது அறிந்தும் மெழுகு
தருவது ஒளியே மெழுகு
உரு(கு)வது அழிய மெழுகு
என
உணர்த்தினீர் கவிதை அருமை!
புலவர் சாஇராமாநுசம்