Tuesday, June 28, 2011

கொஞ்சம் விட்டு

ஆதியில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே மீண்டும் ஆதியாகும்!
பசியில் கொஞ்சம் விட்டால்
மீண்டும் பசியாகும்!
பாசத்தில் கொஞ்சம் விட்டால்
நேசம் மிகுதியாகும்!
கோபத்தில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே சாதனையாகும்!
தாகத்தில் கொஞ்சம் விட்டால்
மீதமே வேட்கையாகும்!
கச்சையில் கொஞ்சம் விட்டால்
மிச்சமே சேமிப்பாகும்!
இச்சையில் கொஞ்சம் விட்டால்
அதுவே மோகமாகும்!
இன்பத்தில் கொஞ்சம் விட்டால்
அனுபவமே ஞானமாகும்!
கொஞ்சமாய் விட்டுவிட,
மீதமே வாழ்வின் ஆதியாகும்!
ஒரு தொடர்கதையாகும்!!

3 comments:

  1. நண்பா...

    நமது அண்மைய உரையாடல்களை கவனித்திருக்கிறாயா?

    உன் கவிதைகளில் 'சுரம் ' இல்லையென உன் முதல் வாசகனான நான் உன் எதிரே விமர்சித்தேன்...

    அதனால்தானோ என்னவோ...

    கொஞ்சம் விட்டு...

    அழகான கவிதையைத் தந்திருக்கிறாய்!

    இதை..இதை..இதைதான் நாங்கள் எதிர்பார்க்கிறோம் நண்பா!

    -கேயார்

    ReplyDelete
  2. நண்பா

    தினமெழுதத்தான் நினைக்கிறேன் சமயத்தில் ஒரு அரை மணி கூட கிடைக்க கடினமாயிருக்கிறது என்னால் இயன்றவரை முயன்று இதே போல் தர அந்த ஆண்டவனைத்தான் நம்புகிறேன்

    இன்னும் இன்னும் என்று நீ என்னை உந்தும்போது நானும் கொஞ்சம் வேகம் சேர்க்கிறேன்
    கடவுள் இதை தொடர்ச்சியாய் வைத்திருக்க வேண்டுகிறேன்
    நன்றி

    ஜேகே

    ReplyDelete
  3. விட்டுக் கொடுத்தலில் இவ்வளவு வகையா?!

    ReplyDelete