Saturday, June 11, 2011

தன்னை இழந்து...

தன்னை வதைத்து,
பட்டுப்பூச்சி, பட்டாய் அவளை அணைத்தது!

தன்னையே தந்து,
பூக்களும் அவளை அடைந்தன!

தன்னை இழைத்து,
மஞ்சளும் அவளை பொலிவித்தது!

தன்னை சிதைத்து,
மருதாணியும் அவளில் சிவந்தது!

தன்னையே உருமாற்றி,
தங்கமும் அவளை அலங்கரித்தது!

தன்னை உருக்கி,
வெள்ளியும் அவளுக்கு கொலுசானது!

இவை பார்த்து தன்னை இழந்தே,
அவனும் அவளை அடைந்தான்!

3 comments:

  1. தோழா!

    கவிதை அருமை! இதுதான் ஒன்றை இழந்து, ஒன்றைப் பெறுதலோ?!

    அவளும் தன்னை இழந்து உன்னைப் பெற்றது...காலத்தின் கொடுமை அன்றோ?!

    ஏன் இதை எழுத்தில் மறந்தாய்...இல்லை மறைத்தாய்?!

    என்றும் அன்புடன்,
    கேயார்

    ReplyDelete
  2. இழப்பு மாதிரி தெரியவில்லை!புதிதாய் பெற்ற மாதிரியும் , நல்ல மாற்றம் மாதிரியும் தான் தெரிகிறது!ஆக இழப்பில்லை; வரவுதான்.சரியா?!

    ReplyDelete
  3. தோழா அவள் இழக்கவில்லை அவள் ஈன்றது மட்டும் தெரிந்தது , என்னை பெற்றது காலத்தின் கொடுமை அவளூக்கு தான் நண்பா எனக்கு அது கொடுப்பினை

    நன்றி நண்பா

    இழப்பன்று இது பொக்கிஷம் ஏதேனும் கொடுத்தால் தான் கிட்டும் என்று கூற வந்தேன்

    நன்றி தென்றல்

    ReplyDelete