Sunday, June 19, 2011

என்றோ எழுதிய கவிதை - 21

தோழர் ஜே கே 'சொல்லிக்காம கொண்டுக்காம'  போனதால... இதோ இப்ப 'சைடு கேப்ல' நம்ம கவிதை...!

தன்னந்தனியாய் அவள்...
தாகமாய் நான்...!
திகட்டாத தித்திப்பாய் அவள்...
தீயாய் நான்...!
துள்ளலாய் அவள்..
தூண்டில் மீனாய் நான்..!
தெம்மாங்காய் அவள்...
தேனிசையாய் நான்...!
தையலாய் அவள்...
தொட்டு விடும் தூரத்தில் நான்...! - என்றாலும் 
தோல்வியில் முடிந்தது எங்கள் காதல்..!!

5 comments:

  1. நல்ல படைப்பு
    இந்தக் காதல் வென்றிருந்தால்தான் ஆச்சரியம்
    ஏனெனில் இருவருவே
    ஆரம்பத்தில் "தன்னந்தனியாய் "இருந்ததில்இருந்து
    "தொட்டுவிடும் தூரம்வரை "இருவரும்
    மனத்தளவில் தனித்தனியாகத் தானே
    இருக்கிறார்கள்
    எனவே கவிதையும் அழகு
    முடிவும் சரி

    ReplyDelete
  2. கவிதைக்கு உயிர் கொடுத்த தோழன் கேயார் வாழ்க!
    என்னாச்சு ஜேகே-விற்கு?

    ReplyDelete
  3. @ரமணி ஸார்! - வெளிப்படையா சொல்லோணும்னா இவ்ளோ யோசிக்கலை! காதல், தோல்வி-ல முடிஞ்சா நல்லாருக்குமேன்னு எழுதினது! அவ்ளோதான்! 'த' வரிசைல எழுதொணும்னு கட்டுப்பாடு வேற! ரொம்ப நன்றி ஸார்!

    @தென்றல் மேடம்! - வாழ்க-னு சொன்னாலே 'பகீர்'ங்குது! வேணாங்கோ! விட்டுடுங்கோ! அண்ணன் மற்றும் தோழர் ஜே கே அவர்கள் கவிதை எழுத லொகேஷன் தேடிப் போயிருப்பதாகத் தகவல்!

    @கவிதை வீதி - மிக்க நன்றி!

    -கேயார்

    ReplyDelete
  4. கேயார்

    ஏதோ வேலை பளுல ஒரு ரெண்டு நாள் தள்ளி போச்சுதுன்னா ஊர விட்டே ஓடிட்டாப்பல் சீன் போடறது நல்லாவே இல்ல

    தென்றல் வேலை காரணமாக ஓரு வாரம் என்னால் கேயாருக்கு சரியான் நேரத்தில் அனுப்ப இயலவில்லை
    இதோ இப்போது அனுப்பிவிட்டேன் கேட்டமைக்கு மிக்க நன்றி

    கவிதை நல்லா இருந்தது கேயார்

    ஜேகே

    ReplyDelete