Saturday, June 4, 2011

மரணப் பயணம்!

சமீபத்தில் எங்கள் நண்பர் குழுவைப் புரட்டிப் போட்ட மரணம் அது...காயங்களுக்குத் தன் நாவாலேயே ஆறுதல் தேடும் பூனையைப் போல....எங்களுக்கு நாங்களே சொல்லிக்கொண்ட ஆறுதல்...

ஜே கே! நம் சந்ததியில் துவங்கி விட்டதடா மரணப் பயணம்... உன் கவிதை எனது கண்களை மேலும் பனிக்கச் செய்து விட்டதடா!


-கேயார்

கயவராய் பலர் இப்பூமியில்...
கடுஞ்சொல் ஊனத்தோடு சிலர்...
பழி உணர்ச்சியில் இன்னும் சிலர்...
துரோகியாய் கொஞ்சம் பேர்...
புன்னகையே தெரியாதோர் பலர்...
வஞ்சம் மனதிடை கொண்டோரும் உளர்...
என இவ்வுலகில்
பாவிகளுக்கெல்லாம் இடமிருக்க...

சிரித்த முகமாய், இனிய சொல் பேசி,
கடமைக்கென்று ஊர் ஊராய் திரிந்து,
கண்ணியமாய் வாழ்ந்து,
கடவுளை நம்பினவருக்கேன் மரணம்!

அவர் மரணித்து இல்லாதிருக்க,
அவர்தம் உறவுகள் இருந்தும்,
மரணிப்பது என்ன நியதி?
புரியாத புதிராய் பல கேள்விகள்...

கண்ணீர் துளியாய் இமைகள் பாரம் சுமக்க,
மனது “அத்திம்பேருக்கு”
அவரின் ஆன்மாவுக்கு,
கடவுளிடை சேர்ந்திட,
சேர்ந்தே அவரின்
மனையாளையும்,மக்களையும்,
கடவுளாய்க் காத்திட....
ஆழ்ந்த பாரத்துடன்,
மனமார வேண்டிக்கொள்கிறேன்!

5 comments:

  1. மனம் கனத்துப் போனது
    அவரது ஆன்மா சாந்தி அடையவும்
    அவரது குடும்பத்தினர்
    ஈடு செய்ய்இயலாத அவரது இழப்பினை
    தாங்கிக் கொள்ளும் சக்தியினை பெறவும்
    அருளுமாறு ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்

    ReplyDelete
  2. அதிர்ச்சியாக இருக்கு. :( இத்துயரிலிருந்து மீள அவரது குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்களுக்கும் இறைவன் துணையிருக்கட்டும். என் பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  3. தங்கள் அத்திம்பேரின் மரணம் ஈடு செய்ய முடியா இழப்பு தான்.ஆழ்ந்த வருத்தத்தினை அவர்களின் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
    அவர் தம் குடும்பதினருக்கு ஆறுதல் கூறுங்கள்.
    கவிதை மனதை பிசைகிறது!

    ReplyDelete
  4. நன்றி ரமணி , நன்றி விதூஷ், நன்றி தென்றல்

    உங்களின் பிரார்த்தனை அவர்தம் குடும்பத்தினருக்கு நல்ல விதமாய் அமையும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது

    மிக்க நன்றி
    ஜேகே

    ReplyDelete
  5. அதிர்வலைகளில் மீளவே நெடு நேரம் ஆகின்றது ...
    அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிகொள்வோம் ...

    ReplyDelete