Sunday, April 24, 2011

கல்வியும், கலவியும்!

ஜே கே 'ஷ்டைல்'-ல் ஒரு கவிதை!

கற்கக் கற்க
முதலுமில்லை, முடிவுமில்லைதான்...!

புதிராயும், புதுமையாயும்
இருப்பது எப்போதும் இங்குதான்...!

ஒவ்வொரு முறையும்
கற்பதும், கற்பிப்பதும் சுகம்தான்...!

நடந்ததை நினைவில் வைத்து,
அசை போடுவதில் என்றும் ஆனந்தம்தான்..!

ஒன்றைப் பொதுவில் வைத்து,
ஒன்றை மறைவில் வைத்து
வாழ்தல் முறையாகும்...!

மாறாய்க்
கலவியைப் பொதுவிலிட்டு,
கல்வியைக் குடத்திலிட்டு
வாழ்தல் பிழையாகும்...!

2 comments:

  1. கேயார் ,கலக்கிட்டீங்க போங்க!
    இன்னும் நிறைய கவிதை பிறக்கட்டும்,வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஆஹா பதில் அருமை கேயார் எங்கேயோ ஓளித்து வைத்து அவ்வபொழுது விளையாட்டு காட்டாமல் எப்பொழுதும் எழுதினால் இன்னும் அழகாய் இருக்கும்
    கேட்பீர்களா

    ஜேகே

    ReplyDelete