Tuesday, April 5, 2011

பட்டாம்பூச்சி!

வீட்டின் கரப்பானை
விரட்டி வீரம் கொண்டேன்!

எத்திவிட தூரம் சென்றது
கவிழ்ந்து விழுந்தது!

முழுதாய் விரட்டிட
அருகில் சென்றேன்
சிறிதாய் பறந்தே
வெளியில் சென்றது!

என் வயிறெல்லாம்
பட்டாம்பூச்சியை பறக்கவிட்டு!!

6 comments:

  1. ஜே கே

    பட்டாம்பூச்சி தலைப்பைப் படித்து விட்டு
    வண்ணத்துப் பூச்சி கற்பனையில் இருந்த என்னை
    கரப்பான் பூச்சி நிதர்சனத்துக்கு இழுத்து வந்து விட்டீர்களே! இது நியாயம்தானா?

    அட்டஹாஸ்யம், அட்டகாசமும் தங்களுக்குக் கை வந்த கலைதானே!

    -கேயார்

    ReplyDelete
  2. ஹா,ஹா,ஹா,ஹா.... வித்தியாசமாக இருந்துச்சு, இன்றைய கவிதை.

    ReplyDelete
  3. படித்து விட்டு என் வயிற்றிலும் பட்டாம்பூச்சி. சிரிப்பில். நமமளைப்போல இன்னும் பல பேர் இருக்கிறார்கள் என்று..

    ReplyDelete
  4. கேயார் நீங்க சொன்ன மாதிரி ஜேகே எனக்குப் பிடித்த பட்டாம் பூச்சியைப் பற்றி எழுதியிருக்கிறார் என்று ஓடோடி வந்தேன். ஏமாத்திட்டார்.

    ReplyDelete
  5. நன்றி கேயார்,
    நன்றி செலவன் எனக்கும் ஒரு சந்தோஷம் இது இன்னும் பலருக்கும் இருக்கிறதை அறிகையில்

    நன்றி அரசன்

    தென்றல் இன்னுமொரு பட்டாம்பூச்சியை பிடிக்க முயல்வேன் உங்களுக்காக

    நன்றி
    ஜேகே

    ReplyDelete