Saturday, December 5, 2009

விடைகொடு என் தோழா!

இன்றைய கணிப்பொறி உலகில் நிலையானது ஏதுமில்லை.

என்னுடன் உழைத்த சக நண்பர்களில் ஒருவர் வேலையிழக்க நேரிட்டது. 8 வருட காலமாக பக்கத்து இருக்கையில், 12 மணி நேரம் பின் கணினி மூலம், இன்னும் சில, என்று இருந்தவர் இனி பேசக்கூட இல்லாமல் போய் விடுவார் என்ற வருத்ததிலும்,

இறுதி நாளில் இருந்த கடைசி 10 நிமிடங்களில் அவருக்கு ஏதேனும் பரிசாய், நினைவாய், கொடுக்க எண்ணி எழுதியது இது.

அவர்தம் குடும்ப சகிதம் இதைப் படித்து அனுபவித்ததையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். இழப்பு சோகம், இருந்தும் இல்லாமல் இருப்பது பெரும் சோகம், அதுவும் நம் நாடன்றி வெளிநாட்டில் இது தாளாத சோகம்..


விடைகொடு என் தோழா, விடையற்ற வினாவோடு
விடைகொடு என் தோழா,
விடாது இருக்கும் நம் நட்பு, தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நதிபோல் பல பாதை நாம் கடந்தோம்
கல்லும் முள்ளும் மேடும் பள்ளமும் களைந்தோம்
சேர்ந்தே தெளிந்தோம் யாவும் பகிர்ந்தோம்
நம்மை விதைத்தே நாம் வளர்ந்தோம்
பிரிவென்பதை மறந்தோம் உழைப்பினில்
நம்மை மறந்தோம்

தேடுதலில் புரிதலின்றி வேட்டையில் இலக்கின்றி
பாதையில் நோக்கின்றி காலத்தின் மாற்றம் கண்டோம்
இனி விவாதிக்க, வம்பிழுக்க சிரித்திருக்க, வெறுமே
பார்த்திருக்க பக்கத்தில் உன் உருவமில்லாது போகும்

இருக்கைகள் எல்லாம் இளைப்பாற
நினைவுகள் வேலை செய்யும் நேரமிது
வெற்று பார்வையில் காற்றை தீண்டி
இல்லாத தாகத்திற்கு தண்ணீர் தேடி
கடிகார முள்ளை நானும் சேர்ந்தே தள்ளி
நாள் நகர்த்தும் காலமிது

வேற்று கிரகம் போல் என் இடமாகும்
நீருற்று போல் நாம் இருந்த காலம்
நினைவில் ஓடும்
வழியில் பார்ப்போமினி
கை உயர்த்தி கண் இருத்தி
பெருமூச்சோடு நம் வழி தொடருவோம்
விடாது இருக்கும் நம் நட்பு தொடாது தூரம் நீ சென்றாலும்
விடாது இருக்கும் நம் நட்பு

நீ இனி போகுமிடமெல்லாம்
வெற்றி கண்டு வீடோடு சிரித்திருக்க
என் மனதோடு பிரார்த்திருப்பேன்
விடைகொடு என் தோழா!

4 comments:

  1. எந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றீர்கள் தலைவரே?

    ReplyDelete
  2. மனதை உருக்கும் கவிதை....

    ReplyDelete
  3. //எந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றீர்கள் தலைவரே?//

    hpயில் நன்பரே உங்களுக்கு மடல் அனுப்பியிருக்கிறேன்

    நன்றி விநாயகமுருகன்

    நன்றி பாலவசகன்

    பாராட்டுக்கு நன்றி தும்பிக்கையாழ்வான்

    ஜேகே

    ReplyDelete