நினைத்தாலே இனிக்கும் (1979)
பாலச்சந்தர் இயக்கத்தில், சுஜாதா எழுத்தில், எம் எஸ் விஸ்வநாதன் இசையில் நனைந்த 'நினைத்தாலே இனிக்கும்' படத்தில் ரஜினியின் பங்கு முக்கியமானது.
கொஞ்சம் உன்னிப்பாக நோக்கினால் தீபக் பாத்திரத்தில், சுஜாதாவின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான வஸந்த்-ஐப் பார்க்கலாம். பேச்சில் நக்கல், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத தன்மை, எந்தப் பெண்ணைப் பார்த்ததும் விழிகள் விரிவது, கொஞ்சம் புத்திசாலித்தனம்/நகைச்சுவை கலவையில், குறுந்தாடி ரஜினி 'புகுந்து விளையாடிய' படம்.
சின்னச் சின்ன திருட்டுக்கள், 'டேப் சுந்தரி'யைத் தேடி அலைவது, 'வரவேற்பாளினி' (நன்றி: சுஜாதா)யைப் பார்த்து ஜொள்ளு விடுவது, 'சிவ சம்போ' (அப்போதே சிவனுடன் சம்பந்தம் இருந்திருக்கிறது!)வை விடாது பிடித்திருப்பது, 'சிவ சம்போ' / 'நம்ம ஊரு சிங்காரி' பாடல்களில் ஏகத்துக்கு 'ஷ்டைலு', போக வில்லன்களைப் போட்டு உதைப்பது என ரஜினிக்குத் தீனி நெறைய்ய!
இதையெல்லாம் விட, டொயோட்டா காருக்கு ஆசைப்பட்டு, இறுதியில் 'சுண்டு விரல் போதும் ஸார்!' என உச்சபட்ச டென்ஷனுடன் ரஜினி அடங்கிப்போவது ஹிலேரியஸ் அடேங்கப்பா!
ரஜினிக்கு நகைச்சுவை உணர்வு(ம்) உண்டு என்பதை அழுத்தமாய்க் கோடிட்டுக் காட்டிய முதல் படமும் இதுதான்!

சான்ஸே இல்லைங்க. அப்படி ஒரு படம் "நினைத்தாலே இனிக்கும்". என்னோட அபிமான இயக்குனர் மற்றும் அபிமான நடிகர் இருந்தபோதும் ரஜினியையும் ரசித்திருக்கிறேன். தொடர்க.
ReplyDeleteநன்றி.
my husband likes this movie.
ReplyDeletetill 2003, though i didnot have any strong reasons, i avoided kamal movies. bhaskar (hubby) insisted i should watch Anbe Sivam, which i agreed as i liked madhavan. then i became a fan of Kamal. :)) then some time during 2004 i watched this movie "ninaithaale inikkum" LOL...
-vidhya
இனி கமலுடன் சேர்ந்து நடிப்பதில்லை என்று ரஜினி முடிவு எடுத்தது- இப்படத்தில் நடித்து கொண்டு இருந்த போது தான்.
ReplyDeleteநன்றி கல்யாணி சுரேஷ்!
ReplyDeleteநெசம்மாவே இந்தப்படத்தை எப்போது நினைத்தாலும் இனிக்கும்!
-இன்றைய கவிதை நண்பர்கள்
தமிழுதயம்,
ReplyDeleteஉண்மைதான். இந்தப் படத்திற்குப் பின் இருவரும் பிரிந்து, தனித்தனியாக நடிக்கத் துவங்கி, சாதனை படைத்தது 'தனி'க் கதை!
-இன்றைய கவிதை நண்பர்கள்
விதூஷ்,
ReplyDeleteநல்ல படத்தை எப்போது பார்த்தால் என்ன?
தரம் குறைந்தா விடும்?!!
-இன்றைய கவிதை நண்பர்கள்